சபரிமலை சர்ச்சை படம்; ரெஹானா பாத்திமா சஸ்பெண்ட்: பிஎஸ்என்எல் நடவடிக்கை

சபரிமலை சர்ச்சை படம்; ரெஹானா பாத்திமா சஸ்பெண்ட்: பிஎஸ்என்எல் நடவடிக்கை
Updated on
1 min read

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைய முயன்று பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா, மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் சமூகவலைதளங்களில் பதிவிட்டதாக கூறி அவரை சஸ்பெண்ட் செய்து பிஎஸ்என்எல் நிறுவனம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கலாம் என்று கடந்த செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்தன.

கடந்த மாதம் ஹைதராபாத்தைச் சேர்ந்த தொலைக்காட்சி செய்தியாளர் கவிதாவும், பெண்ணியவாதி ரெஹானா பாத்திமாவும் சபரிமலை சென்றனர். ஏறக்குறைய சன்னிதானத்தை நெருக்கும் நிலையில், பக்தர்கள், தந்திரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் மலையில் இருந்து கீழே இறக்கப்பட்டனர்.

இதையடுத்து, கொச்சியில் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணியாற்றிய ரெஹானா பாத்திமா பழரவிட்டம் நகரில் உள்ள கிளைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதனிடையே சபரிமலை செய்யும் பக்தர்கள் போல உடையணிந்து ‘தத்துவமஸி’ என தலைப்பிட்டு அவர் பேஸ்புக்கில் பதிவிட்டு இருந்தார். பேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய வகையில், மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் ரெஹானா பாத்திமாக தகவல்களை வெளியிட்டதாக கூறி அவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

இந்தநிலையில் தொடர் நடவடிக்கையாக அவர் பணியாற்றும் அரசு நிறுவனமான பிஎஸ்என்எல்லும் அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. பேஸ்புக்கில் மத உயர்வுகளை புண்படுத்தும் வகையில் பதிவுகளை வெளியிட்டதற்காக ரெஹானா பாத்திமாவை பணியிடை நீக்கம் செய்து பிஎஸ்என்எல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in