Last Updated : 28 Nov, 2018 09:07 PM

 

Published : 28 Nov 2018 09:07 PM
Last Updated : 28 Nov 2018 09:07 PM

அரசியல் பகைமை காரணமாக எங்கள் மீது தவறாக குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர்: சொராபுதின் போலி என்கவுண்டர் வழக்கில் போலீஸார் அதிரடி

சொராபுதின் ஷேக்  போலி என்கவுண்டர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பல போலீஸார்கள் அரசியல் பகைமையினால் தங்களை தவறாக இந்த வழக்கில் ஈடுபடுத்தினர் என்று சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் அதிரடி வாக்குமூலம் அளித்தனர்.

சிறப்பு சிபிஐ நீதிபதி எஸ்.ஜெ.சர்மா, 2005ம் ஆண்டு வழக்கின் இறுதி வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருகிறார். சாட்சிகளை விசாரித்த பிறகு அனைத்து சாட்சிகளின் வாக்குமூலங்களைப் பதிவு செய்யும் படலம் நடைபெற்று வருகிறது.

ராஜஸ்தான் போலீஸ் துறையின் முன்னால் ஆய்வாளர் அப்துல் ரஹ்மான் தன் வாக்குமூலத்தில், தனக்கும் இந்த வழக்குக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்றும் தவறாக தன்னை இதில் நுழைத்துள்ளனர் என்றும் நீதிபதியிடம் தெரிவித்தார்.  இவர்தான் சொராபுதீன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சிபிஐ குற்றம்சாட்டியிருந்தது.

மேலும், விஜய் குமார் ராத்தொட்,  யுத்வீர் சிங், கர்த்தார் சிங் மற்றும் நாராயண் சிங் இவர்கள் அனைவரும் உதவி சப் இன்ஸ்பெக்டர் மட்ட அதிகாரிக்கு கான்ஸ்டபிள்களாக ஜூனியர்களாகப் பணியாற்றியவர்கள். இவர்களும் அரசியல் பகைமை காரணமாக தங்களை தவறாக இந்த வழக்கில் குற்றம்சாட்டியதாக நீதிபதியிடம் தெரிவித்தார்கள்.

நவம்பர் 26, 2005-ல் சொராபுதின் போலீஸ் காவலில் இருக்கும் போது என்கவுண்டர் செய்யப்பட்டார், இது போலி என்கவுண்டர் என்ற சர்ச்சை மூண்டது.  சொராபுதின் மனைவி கவுசர் பீ என்பவரும் இதே போல் ஜோடிக்கப்பட்ட ஒரு துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இந்த இரண்டு போலி என்கவுண்டர்களுக்கும் நேரடியாக சாட்சியாகத் திகழ்ந்த துளசி பிரஜாபதி 2006-ல் குஜராத் மற்றும் ராஜஸ்தான் போலீஸாரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மொத்தம் 38 பேர்மீது போலி என்கவுண்டர் வழக்கு தொடரப்பட்டதில் பாஜக தலைவர் அமித் ஷா உட்பட 16 பேர் விடுவிக்கப்பட்டனர். அமித் ஷா அப்பொது குஜராத் உள்துறை அமைச்சராக இருந்தார்.

சிபிஐ குற்றப்பத்திரைகையின் படி சொராபுதின் மற்றும் அவரது மனைவி இருவரையும் குஜராத் ஏடிஎஸ் அதிகாரிகளும், ராஜஸ்தான் போலீஸாரும் ஹைதராபாத் அருகே கடத்தியதாக கூறியிருந்தது.  நேரடியான சாட்சி துளசி பிரஜாபதி குஜராத், ராஜஸ்தான் போலீஸாரால் கொல்லப்பட்டதாகவும் சிபிஐ பதிவு செய்தது.

சொராபுதின், அவர் மனைவி பீ, மற்றும் பிரஜாபதி வழக்குகள் 2013-ல் ஒரே வழக்காக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சிபிஐ தங்களை தவறாக இதில் குற்றம்சாட்டியுள்ளது, காரணம் அரசியல் பகைமை என்று கோர்ட்டில் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x