Last Updated : 08 Nov, 2018 02:10 PM

 

Published : 08 Nov 2018 02:10 PM
Last Updated : 08 Nov 2018 02:10 PM

மும்பையில் விமானங்கள் தாமதம்: ஏர் இந்தியா ஒப்பந்தத் தொழிலாளர்கள் திடீர் வேலைநிறுத்தம்

ஏர் இந்தியா விமானப் போக்குவரத்து ஒப்பந்தத் தொழிலாளர்கள் மேற்கொண்டுள்ள திடீர் வேலைநிறுத்தம் காரணமாக மும்பை சத்திரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஏர்இந்தியாவின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:

ஏஐஏடிஎஸ்எல் ஒப்பந்த ஊழியர்களால் திடீரென விமான நிலையத்தில் பணிகள் முடங்கியுள்ளன. இதனால் சில விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் நிலைமைகளைக் கண்காணித்து வருகிறோம். விமானப் போக்குவரத்தில் ஏற்பட்ட தாமதம் அல்லது இடையூறுகளை குறைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையை உடனடியாக சரிசெய்ய ஏர்இந்தியா தனது நிரந்தர ஊழியர்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

அதற்கான முயற்சிகளில் தற்போது இறங்கியுள்ளோம். மற்றபடி இன்று அதிகாலை மட்டுமே விமானங்கள் புறப்படுவதில் 2 மணிநேரம் கூடுதலாக தாமதமானது.

இவ்வாறு ஏர் இந்தியா உயரதிகாரி தெரிவித்தார்.

ஒப்பந்தத் தொழிலாளர்கள் மேற்கொண்ட திடீர் வேலைநிறுத்தத்தால் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் கிட்டத்தட்ட 12 விமானங்கள் புறப்பட தாமதமானதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x