

தற்கொலைக்கு முயற்சிப்போர் மீது வழக்கு பதிவு செய்ய வகை செய்யும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 309-ஐ நீக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை செய்து வருகிறது.
இது தொடர்பாக மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் செவ்வாய்க்கிழமை பேசும்போது, “குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகிய வற்றில் திருத்தங்களை கொண்டு வர மத்திய அரசு உத்தேசித் துள்ளது. அதனுடன் சேர்த்து தற்கொலை வழக்கு தொடர்பான 309-வது பிரிவையும் நீக்குவது பற்றி அனைத்து தரப்பினரிடமும் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும்” என்றார்.
இந்த சட்டப் பிரிவு மனிதத் தன்மையற்றது. அதை நீக்க வேண்டும். மனதளவில் பாதிக்கப் பட்டு தற்கொலை செய்ய முயற்சித் தவருக்கு, கூடுதலாக சிறை தண்ட னையும் அளிப்பது சரியல்ல என்று சட்ட கமிஷன் பரிந்துரை செய் துள்ளது.
இப்போதுள்ள நடைமுறைப்படி தற்கொலை செய்ய முயற்சிக்கும் ஒருவரை கைது செய்ய முடியும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கவும் சட்டத்தில் இடமுள்ளது.