Published : 25 Aug 2014 10:29 AM
Last Updated : 25 Aug 2014 10:29 AM

மத்தியப்பிரதேசத்தில் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பலி; 60 பேர் படுகாயம்

மத்தியப்பிரதேசத்தில் காம்நாத் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பலியாகினர். 60 பேர் படுகாயமடைந்தனர்.

மத்தியப்பிரதேசம் மாநிலம் சத்னா மாவட்டத்தில் உள்ளது காம்நாத் பஹாத் கோயில். இந்த கோயிலில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர்.

அப்போது கோயிலில் பக்தர்கள் சிறப்பு தரிசனத்தை காண முற்பட்டபோது கூட்டநெரிசல் ஏற்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாலையில், ஏற்பட்ட இந்த சம்பவத்தில் 10 பேர் பலியாகினர். 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். பலியானோர் எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுவதாகவும் மாவட்ட ஆட்சியர் எம்.எல்.மீனா தெரிவித்துள்ளார்.

பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் என தெரிகிறது.

முதல்வர் நிவாரணம் அறிவிப்பு:

இச்சம்பவத்தில் பலியானவர்கள் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள ம.பி. முதல்வர் சிவ்ராஜ்சிங் சவான் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 பணமும் லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.10,000 பணமும் நிவாரணத் தொகையாக அளிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x