Published : 02 Oct 2018 09:23 AM
Last Updated : 02 Oct 2018 09:23 AM

நீதித்துறை வலுவாக உள்ளது: தலைமை நீதிபதி மிஸ்ரா கருத்து

நமது நீதித்துறை உலகிலேயே மிகவும் வலுவானதாக உள்ளது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இருந்து ஓய்வுபெறும் தீபக் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் தீபக் மிஸ்ரா இன்றுடன் பதவி ஓய்வுபெறுகிறார். இதையொட்டி, உச்ச நீதிமன்ற வளாகத்தில் நேற்று மாலை அவருக்கு பிரிவுபசார நிகழ்ச்சி நடந்தது. இதில் மூத்த நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். நன்றி தெரிவித்து தீபக் மிஸ்ரா பேசியதாவது:

நமது நீதித்துறை உலகிலேயே மிகவும் வலிமையான நீதித்துறை யாக உள்ளது. எத்தனையோ குழப்பமான, சிக்கலான வழக்கு களைக் கூட கையாளும் அளவுக்கு உறுதியானதாக உள்ளது. இளம் வழக்கறிஞர்கள் நமது சொத்து. நீதிபரிபாலனத்தை மேம்படுத்தும் அளவுக்கு திறமை மிக்கவர்களாக உள்ளனர். நீதி என்பது மனிதாபிமானம் மிக்கதாக இருக்க வேண்டும். நீதிபதி என்ற முறையில் எனது பதவிக்காலத்தில் பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என்பதில் இருந்து நான் விலகியது இல்லை. நமது அரசியல் சாசனத்தின் உண்மையான லட்சியங்களைக் காக்க வேண்டும். இவ்வாறு தீபக் மிஸ்ரா பேசினார்.

கடந்த 2017-ம் ஆண்டில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற தீபக் மிஸ்ரா, தனது பதவிக்காலத்தில் ஆதார் வழக்கு, சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாமா? தன் பாலின உறவு, திருமண பந்தத்தை தாண்டிய உறவு குற்றமா? ஆகிய முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது. தீபக் மிஸ்ரா ஓய்வு பெறுவதையடுத்து, நாட்டின் புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் நாளை பதவியேற்க உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x