Last Updated : 15 Oct, 2018 09:07 AM

 

Published : 15 Oct 2018 09:07 AM
Last Updated : 15 Oct 2018 09:07 AM

ம.பி.யில் பாஜகவை வீழ்த்துவதே லட்சியம்: காங்கிரஸ் திட்டவட்டம்

எதிர்வரும் மத்திய பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில், மாநிலத்தில் ஆளும் பாஜகவை வீழ்த்துவதே காங்கிரஸின் லட்சியம் என அக் கட்சியின் மூத்த தலைவர் ஜோதி ராதித்ய சின்ஹா தெரிவித்தார்.

மத்தியப் பிரதேச சட்டப்பேர வைத் தேர்தல் அடுத்த மாதம் 28-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் ஆளும் பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும், ஆட்சியைத் தக்க வைக்கும் நோக்கில் பாஜகவும் கடுமையாக களப் பணியாற்றி வருகின்றன.

இந்தத் தேர்தலில் பல சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பாஜகவை தோற்கடிக்க காங்கிரஸ் வியூகம் அமைத்துள்ளது. இதற் காக, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் காங்கிரஸ் பேச்சு வார்த்தை நடத்தியது. ஆனால், இரு கட்சிகளுக்கு இடையே தொகுதி உடன்பாட்டில் சமரசம் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து, மத்திய பிரதேசம் மட்டுமின்றி ராஜஸ்தான் பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அண்மையில் அறிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா, டெல்லியில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

மத்திய பிரதேசத்தை பொறுத்த வரை, அங்கு ஆளும் பாஜக மீது பெருவாரியான மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அம் மாநிலத்தில் தொடர்ந்து 14 ஆண்டு களாக மிக மோசமான ஆட்சியை பாஜக கொடுத்து வந்துள்ளது. ஏழை மக்களும், விவசாயிகளும் அரசால் சுரண்டப்பட்டு வருகின்றனர். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர் குலைந்துள்ளது. எனவே, இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு மத்திய பிரதேச மக்கள் தக்க பாடம் புகட்டுவர். ஏழைகளின் வளர்ச்சிக் கும், விவசாயத்துக்கும் முக்கியத் துவம் கொடுக்கும் காங்கிரஸ் கட்சி, ஆட்சிக்கு வர வேண்டும் என பெரும்பாலான மக்கள் விரும்புகிறார்கள்.

காங்கிரஸுடன் கூட்டணி அமைக்காமல் பகுஜன் சமாஜ் தனித்து போட்டியிடுவதால் எங்க ளுக்கு எந்தவித இழப்பும் கிடை யாது. இதனால், காங்கிரஸுக்கு கிடைக்க வேண்டிய தலித் வாக்கு கள் பிரியும் எனக் கூறுவதை ஏற்க முடியாது.

ஏனெனில், தலித் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து பாடு பட்டு வரும் காங்கிரஸ் கட்சியை அம்மக்கள் நிச்சயம் நிராகரிக்க மாட்டார்கள். காங்கிரஸை பொறுத்தவரை, மத்திய பிரதேசத் தில் ஆளும் பாஜகவை தோற் கடிப்பதே எங்களின் முதன்மை லட்சியமாகும். இவ்வாறு சிந்தியா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x