Published : 29 Oct 2018 09:21 AM
Last Updated : 29 Oct 2018 09:21 AM

கல்வியில் பின்தங்கினால் என்னவாகும்?- பிஹார் உதாரணம்!

பிஹார் பின்தங்கிய நிலையிலேயே இருக்க கல்வியில் அது பின்தங்கியிருப்பது எவ்வளவு முக்கியமான காரணம் என்பதைச் சமீபத்திய ஆய்வுகள் சொல்கின்றன. சுமார் 1.25 கோடி இளையோரைக் கொண்ட இந்த மாநிலத்தில், 16-17 வயதினரில் 32.57% பேர்தான் பள்ளியில் படிக்கிறார்கள். 44.07% பேருக்குதான் மேல்நிலைக் கல்விக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. உயர்கல்வி நிலை இன்னும் மோசம். மாநிலத்தில் மொத்தம் 744 கல்லூரிகளே உள்ளன. பிஹார் எழுந்து நிற்க இன்னும் பல்லாண்டுகள் தேவைப்படும்; எதிர்காலத்தை நினைத்தால் கவலையே மிஞ்சுகிறது என்கிறார்கள் கல்வியாளர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x