Last Updated : 17 Oct, 2018 11:58 AM

 

Published : 17 Oct 2018 11:58 AM
Last Updated : 17 Oct 2018 11:58 AM

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை: புகார் செய்வதற்கான கால வரம்பை நீக்க மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து புகார் செய்வதற்கான காலவரம்பை நீக்க மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் வழங்கி இருப்பதாக மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.

குற்றவியல் நடைமுறை சட்டம் 468-வது பிரிவின்படி, குழந்தை களுக்கு எதிரான பாலியல் தொல்லை உள்ளிட்ட எந்த குற்றச் செயல் குறித்தும் 3 ஆண்டுகளுக் குள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும். இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டு வரை சிறை தண்டனை வழங்கப்படும்.

எனினும், இந்திய தண்டனை சட்டம் 473-வது பிரிவின்படி, நீதிபதி விரும்பினால் உரிய காரணத்துடன் தாமதமாக செய்யப்படும் புகார்கள் குறித்தும் விசாரிக்க முடியும். எனினும், சிலர் குழந்தையாக இருந்தபோது தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து 18 வயதை கடந்த பிறகே புகார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி கடந்த 3-ம் தேதி மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்துக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில், “குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் பெரும் பாலும் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்களால் நடைபெறுவ தால் உடனடியாக புகார் செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே இதுகுறித்து புகார் செய்வதற் கான கால வரம்பை நீக்க வேண்டும். இந்தப் பிரச்சினை தொடர்பாக 10 முதல் 15 ஆண்டுகளுக்குப் பிறகு புகார் செய்தாலும் அதை விசாரணைக்கு ஏற்க வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.

இது தொடர்பான திட்டத்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் வழங்கி இருப்பதாக மத்திய அமைச்சர் மேனகா காந்தி நேற்று தெரிவித்தார். இது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x