Published : 09 Oct 2018 12:09 pm

Updated : 09 Oct 2018 15:58 pm

 

Published : 09 Oct 2018 12:09 PM
Last Updated : 09 Oct 2018 03:58 PM

சபரிமலை: சீராய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள் சங்கம் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கோரி இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கடந்த 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சபரிமலை கோயிலுக்கு செல்லும் உரிமை அனைத்து வயது பெண்களுக்கும் உள்ளது என தீர்ப்பளித்தது.

தீர்ப்புக்கு, ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தீர்ப்பை எதிர்த்து தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் ஷைலஜா விஜயன் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுதாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ‘‘சபரிமலையில் பெண்களை அனுமதிக்க கோரி மனு தாக்கல் செய்தவர்கள் ஐயப்ப பக்தர்கள் அல்ல. எனவே அவர்கள் மனு மீது விசாரணை நடத்தி தீர்ப்பு தர வேண்டிய அவசியம் இல்லை. கோயில் சம்பிரதாயங்கள் தொடர்பாக முறையிடுவதற்கு பக்தர்களுக்கு மட்டுமே உரிமை உள்ளது.

சபரிமலை கோயிலில் பல ஆயிரம் ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய நம்பிக்கையை சிதைக்கும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்து உள்ளது. மத நம்பிக்கை விவகாரங்களில் அரசியல் சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின் போது பக்தர்களின் தரப்பை கேட்கவில்லை. பக்தர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முறையிடப்பட்டது. ஆனால், மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பட்டியலிடப்பட்டு வழக்கமான முறையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

    Sign up to receive our newsletter in your inbox every day!

    You May Like

    More From This Category

    More From this Author