4 மாநிலங்களில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

4 மாநிலங்களில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்
Updated on
1 min read

பிஹாரில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், மத்தியப் பிரதேசம் மற்றும் கர்நாடகத்தில் தலா 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், பஞ்சாபில் 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வியாழக்கிழமை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது.

பிஹாரில், ஏறக்குறைய கால்நூற் றாண்டு கால அரசியல் எதிரிகளான லாலு பிரசாத் யாதவும் நிதீஷ் குமாரும் பாஜகவை எதிர்க்க ஓரணியாகக் கைகோத்துள்ளனர். மக்களவைத் தேர்தலுக்குப் பின் நடைபெறும் பெரிய தேர்தலாக பிஹார் இடைத்தேர்தல் கருதப்படுகிறது. பிஹாரில் மாலை 4 மணிவரை 42.3 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. பிஹாரில் பாஜக 9 இடங்களிலும், ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

கர்நாடகத்தில் 3 தொகுதிகளிலும் பாஜகவும் காங்கிரஸும் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்துகின்றன. அனைத்துத் தொகுதிகளிலும் வரும் 25-ம் தேதி வாக்கு எண்ணப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in