Published : 28 Oct 2018 05:31 PM
Last Updated : 28 Oct 2018 05:31 PM

‘‘ரத்தம் சிந்தினால் ஐயப்பன் கோயிலை மூட வேண்டும்’’ - சர்ச்சையாக பேசிய தந்திரி குடும்ப வாரிசு கைது

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, மாதாந்திர பூஜைக்காக கடந்த வாரம் திறக்கப்பட்டது. ஆனால், பெண்களை அனுமதிக்கக் கேரள அரசு தீவிரம் காட்டி போதுமான போலீஸ் பாதுகாப்பை உறுதி செய்திருந்தாலும் போராட்டக்காரர்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்காமல் போராடம் நடத்தினர்.

கோயிலுக்குள் வர முயன்ற பெண்கள் திருப்பி அனுப்பிவிடப்பட்டனர். இதனால், பதற்றமான சூழல் ஏற்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயில் திறந்து இருந்த 5 நாட்களே பம்பை, நிலக்கல், சபரிமலையில் போர்க்களம் போல் காட்சியளித்தது. கோயிலுக்கு செல்ல முயன்ற பெண்கள் இறுதி வரை அனுமதிக்கப்படவில்லை.

ஐயப்பன் கோயிலுக்குள் செல்ல முயன்ற பெண்களை தடுத்து பம்பை, சபரிமலை, நிலக்கலில் போராட்டம் நடத்தியது தொடர்பாக கேரள போலீஸார் வழக்குப்பதிவு செய்து இதுவரை 4 ஆயிரம் பேரை கைது செய்துள்ளனர். மேலும் கலவரம் தொடர்பாக சிலரை தேடி வருவதாக கூறி புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தில் முன்னிட்டு நடத்தியவர்களில் சபரிமலை ஐயப்பன் கோயில் தந்திரி குடும்பத்தைச் சேர்ந்த ராகுல் ஈஸ்வரும் ஒருவர். மேலும் ஐயப்ப தர்ம சேனா என்ற அமைப்பின் தலைவராகவும் இருந்து வருகிறார்.  போராட்டம் நடத்தியதற்காக ஏற்கெனவே அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் அவர், எங்கள் எதிர்ப்பையும் மீறி, குறிப்பிட்ட வயது பெண்கள் ஐய்யப்பன் கோயிலுக்குள் நுழைந்தால் இறுதி ஆயுதமாக, கோயிலை மூட ரகசிய திட்டம் வைத்திருந்தோம்.

கோயில் வளாகத்தில் பக்தர்கள் கத்தியால் தங்கள் உடலை கீறி, ரத்தம் சிந்த தயாராக இருந்தோம். கோயில் வளாகத்தில் ரத்தம் சிந்தினால், கோயிலை 3 நாட்கள் மூட வேண்டும், சுத்தம் செய்து பரிகார பூஜைகள் முடிந்த பிறகே திறக்க முடியும்.

ஆனால் போராட்டத்தால் அதற்கு தேவை இல்லாமல் போனது. அதேசமயம் இனிமேலும் இதுபோன்ற சூழல் ஏற்பட்டால் அந்த திட்டத்தை செயல்படுத்துவோம்’’ எனக் கூறினார். ஈஸ்வரின் இந்த கருத்துக்காக தந்திரி குடும்ப வாரிசான ராகுல் ஈஸ்வரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x