Last Updated : 14 Oct, 2018 12:35 AM

 

Published : 14 Oct 2018 12:35 AM
Last Updated : 14 Oct 2018 12:35 AM

உ.பி.யில் எதிர்க்கட்சி வாக்குகள் பிரியும்: புதிய கட்சி தொடங்குகிறார் சுயேச்சை எம்எல்ஏ ராஜா

உ.பி.யின் பிரதாப்கரை சேர்ந்தவர் ராஜா பைய்யா. கிரிமினல் பின்னணி கொண்ட இவர், 1993-ம் ஆண்டு முதல் தொடர்ந்து சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார். தாக்கூர் சமூகத்தினரிடம் மிகுந்த செல்வாக்கு பெற்றுள்ள இவர், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி என எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதன் அமைச்சரவையில் இடம் பெறுபவர்.

இந்நிலையில், ‘ஜன்சத்தா கட்சி’ என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்க ராஜா பைய்யா முடிவு செய்துள்ளார். இதற்காக தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளார். வரும் நவம்பர் 30-ல் லக்னோவில் மாபெரும் கூட்டம் நடத்தி அதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து மூத்த பத்திரிகை

யாளர்கள் ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கூறும்போது, “ராஜா பைய்யா கடைசியாக அகிலேஷ் கட்சிக்கு ஆதரவாக இருந்தார். இதனால் சமாஜ்வாதி கட்சிக்கு தாக்கூர் வாக்குகள் அதிகமாகக் குறையும். குறிப்பாக பாஜகவை எதிர்க்க ஓரணியில் திரளும் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் அடங்கிய எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு பின்னடைவு ஏற்படும். ஏற்கெனவே,

அகிலேஷின் சித்தப்பா ஷிவ்பால் சிங் யாதவ் தனிக்கட்சி தொடங்கியபோது எழுந்தது போல், ராஜா பைய்யாவின் பின்னணியிலும் பாஜகவின் பெயர் அடிபடுகிறது” என்றனர்.

பிரதாப்கர் பகுதியில் பல்வேறு பிரச்சினைகளுக்கு இவர் கட்டப்பஞ்சாயத்து செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இவரது அரண்மனை வீட்டுக்கு பின்புறம் உள்ள குளத்தில் முதலைகள் வளர்ப்பதாகவும், இவற்றுக்கு தன்னை  எதிர்ப்பவர்களை வீசி இரையாக்குவார் என்ற சர்ச்சைகளும் உண்டு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x