

நாடு முழுவதும் சுமார் 15 கோடி ஏழைகளுக்கு கடனுதவி, காப்பீட்டு வசதியுடன் வங்கிக் கணக்கு தொடங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் அறிவிப்பார் என்று தெரிகிறது.
நாடு முழுவதும் இன்னமும் 42 சதவீத மக்களுக்கு வங்கிச் சேவை கிடைக்கவில்லை. எனவே ஏழைகள் பயன்பெறும் வகையில் புதிய வங்கித் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தில் தொடங்கப்படும் வங்கிக் கணக்கில் ரூ.5 ஆயிரம் வரை கடன் பெறுவதற்கான (ஓவர்டிராப்ட்) வசதி அளிக்கப்படும். இதற்காக ரூ.1 லட்சம் காப்பீட்டு வசதி உள்ளடக்கிய “ரூபே” டெபிட் கார்டு வழங்கப்படும். மேலும் ஓய்வூதிய சலுகையும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.