Last Updated : 13 Oct, 2018 08:01 AM

 

Published : 13 Oct 2018 08:01 AM
Last Updated : 13 Oct 2018 08:01 AM

சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்: கேரளாவில் பந்தள அரச குடும்பத்தினர் போராட்டம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபட அனுமதித்த உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் நடந்து வரும் போராட்டம் தீவிரமடைந்துள் ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபடலாம் என உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை அமல்படுத்த கேரளத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான அரசு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. ஆனால் இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், பல்வேறு அமைப்புகள், நாயர் சர்வீஸ் சொசைட்டி, ஐயப்ப பக்தர்கள் அமைப்பினர் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட் டம், கண்டனப் பேரணி, சாலை மறியல் போன்ற போராட்டங்களை தீவிரமாக அவர்கள் நடத்தி வருகின்றனர். நேற்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏராளமான பெண் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் திருவனந்தபுரத் திலுள்ள திருவாங்கூர் தேவசம் போர்டு அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தை கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டி பிரச் சாரக் குழுத் தலைவர் கே. முரளி தரன் தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்யவேண்டும். இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு, உச்ச நீதிமன்ற தீர்ப்பைக் கட்டுப்படுத்த சட்டம் கொண்டு வரலாம். ஆனால் இதுவரை அதை பாஜக செய்யவில்லை’’ என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கன்னம் ராஜேந்தி ரன் கூறும்போது, ‘‘பாரம்பரியத்தை நம்புபவர்களுக்கு எதிரானதல்ல இடதுசாரி ஜனநாயக முன்னணி. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல் படுத்துவதற்கான ஏற்பாடுகளை மட்டுமே மாநில அரசு செய்து வருகிறது’’ என்றார்.

நேற்று கொல்லம் மாவட்டத்தில் பாஜக தலைமையில் சபரிமலை பாதுகாப்பு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியானது கொல்லத்தில் தொடங்கி அக்டோபர் 15-ம் தேதி திருவனந்தபுரத்தில் நிறைவடையவுள்ளது.

பேரணி தொடக்க விழாவில் பாஜக மாநிலத் தலைவர் பி.எஸ். தரன் பிள்ளை பேசியதாவது:

நாங்கள் ஐயப்பனை நம்புபவர்கள் பக்கம் நிற்போம். இந்த விஷயத்தில் எந்தவித சமரசமும் செய்துகொள்ள மாட்டோம். தேவைப்பட்டால் இந்தப் போராட்டத்தை தென் மாநிலம் முழுவதும் நடத்துவோம். லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்களின் துணையுடன் இந்தப் போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று கேரள அரசு தலைமைச் செயலகம் முன்பு பந்தளம் அரச குடும்பத்தினர் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. ஐயப்பன் கோயிலின் பாரம்பரியம், பூஜை முறைகள் பாதுகாக்கப் படவேண்டும் என்று கோரி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்துக்கு ஐயப்ப தர்ம சம்ரக் ஷன சமிதி ஏற்பாடு செய்தி ருந்தது. இதில் கட்சி பேதமின்றி பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர். காங்கிரஸ் எம்எல்ஏ வி.எஸ்.சிவக்குமார், பந்தளம் சுதாகரன், பாஜக எம்.பி. சுரேஷ் கோபி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

போராட்டத்தின்போது பந்தளம் அரசு குடும்ப உறுப்பினர் சசிகுமார வர்மா பேசியதாவது: சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற புண்ணியத்தலமாகும். இந்த கோயிலின் வழிபாடு கள், பாரம்பரியங்கள் கடைப்பிடிக் கப்பட வேண்டும். நீதிமன்றத்தின் உத்தரவால் அந்த பாரம்பரியம் அழிக்கப்படக்கூடாது. ஐயப்பன் கோயில் வழிபாட்டு முறைகளில் மட்டும் ஏன் தடை போட நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்த கோயில் மிகவும் புகழ் பெற்று வருகிறதே.அதனால்தானோ? இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x