Last Updated : 19 Oct, 2018 06:43 PM

 

Published : 19 Oct 2018 06:43 PM
Last Updated : 19 Oct 2018 06:43 PM

‘என்னைப் பொறுத்தவரை என் தந்தை இறந்து விட்டார்’- தலித்தைத் திருமணம் செய்து கொண்டதால் தந்தையால் வெட்டப்பட்ட பெண் மாதவி குமுறல்

தெலுங்கானாவில் செப்டம்பர் மாதம் பட்டப்பகலில் ஹைதராபாத் எரகடா மெயில் ரோடில் தலித் பிரிவு வாலிபரைக் காதலித்துத் திருமணம் செய்த தன் மகள் மாதவியையும் மணமகன் சந்தீப்பையும் தாக்கிய பெண்ணின் தந்தை விவகாரத்தில், ‘என்னைப் பொறுத்தவரை என் தந்தை இறந்து விட்டார்’ என்று மாதவி பேட்டியளித்துள்ளார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த நரசிம்மாச்சாரி. இவரின் மகள் மாதவி. இவர்கள் உயர்ந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. மாதவியும், அப்பகுதியைச் சேர்ந்த வேற்று சாதியைச் சேர்ந்த சந்தீப்பும், மாதவியும் கடந்த 5 ஆண்டுகளாக ஒன்றாகப் பழகி வந்துள்ளனர். கல்லூரியிலும் ஒன்றாகப் படித்துள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் காதலித்து வந்தது மாதவியின் தந்தை மனோஹர் சாரிக்குப் பிடிக்கவில்லை. இவரின் எதிர்ப்பை மீறி கடந்த செப்டம்பரில் சந்தீப்பும், மாதவியும் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.

இதனால், மிகுந்த ஆத்திரத்திலும், கோபத்திலும் தந்தை சாரி இருந்து வந்தார். இந்நிலையில், ஹைதாரபாத்தில் உள்ள சாந்தாநகர் பகுதிக்குத் தனது மகள் மாதவியையும், மருமகன்சந்தீப்பையும் சாரி வரக்கூறினார்.

தந்தையின் வார்த்தையை நம்பி தனது கணவரை அழைத்துக் கொண்டு மாதவி சென்றார். தனது தந்தையைப் பார்த்ததும் ஆசையுடன் மாதவி சென்றார். ஆனால், திடீரென சாரி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தனது மருமகன் சந்தீப்பை வெட்டினார், இதில் ரத்த வெள்ளத்தில் சந்தீப் சாய்ந்தார். இதைத் தடுக்க வந்த தனது மகள் மாதவியையும் அவரின் தந்தை வெட்டிச்சாய்த்தார்.

இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்ததும், அங்கிருந்து நரசிம்மாச்சாரி தப்பி ஓடினார். இதையடுத்து போலீசுக்கு தகவல் கொடுத்து அப்பகுதி மக்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்த மாதவி, சந்தீப் இருவரையும் அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாதவியையும், சந்தீப்பையும் புத்தாடைகள் எடுத்துக் கொடுப்பதாகக் கூறி ஒரு இடத்துக்கு வரக்கூறியுள்ளார். அதை நம்பி சென்றபோது, இருவரையும் கொலை செய்ய முயன்றுள்ளார் எனத் தெரிவித்தனர்.

இந்நிலையில் சக்கர நாற்காலியிலிருந்து எழுந்து நின்ற மாதவி தைரியமாக ஊடகங்களைச் சந்தித்த போது, “என் தந்தை என்னைப் பொறுத்தவரை இறந்து விட்டார்.

திருமணத்துக்கு முன் என் கல்விச்சான்றிதழ், துணிமணிகள் என்று எதையும் நான் எடுத்துக் கொள்ளவில்லை. அப்போதுதான் அப்பா என்னை அழைத்து அவற்றயெல்லாம் தருகிறேன் வா என்றார்.

எனக்கு என் தந்தை மீது நம்பிக்கை இல்லை. நான் முன்னமேயே காதல் பற்றி கூறியிருந்தாலும் அவர் என் உணர்வுகளைப் புரிந்து கொண்டு மதிப்பளிக்கக் கூடியவர் அல்ல” என்றார்.

கணவர் சந்தீப்பும், “சாரி தண்டிக்கப்படவில்லை எனில் அவர் எங்களை மீண்டும் தாக்குவார், நான் மாதவியுடன் அமைதியாக வாழ விரும்புகிறேன்” என்றார்.

மேலும் மாதவியின் அம்மா தன் மகளை தந்தை மீது சட்ட நடவடிக்கை வேண்டாம் என்று வலியுறுத்தி வருவதாகவும் ஆனால் மாதவி அதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் சந்தீப் தெரிவித்தார்.

இருவரும் பொறுப்பு முதல்வர் சந்திரசேகர ராவ், முன்னாள் எம்.எல்.ஏ டி. ஸ்ரீநிவாஸ் யாதவ் ஆகியோர் இருவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x