

மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் கவுடா மீது மைத்ரி என்ற கன்னட நடிகை பலாத்காரம் மற்றும் ஏமாற்று புகார் அளித்துள்ளார்.
தன்னை ஏற்கெனவே திருமணம் செய்ததை மறைத்து விட்டு, தற்போது வேறு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்திருப்பதாக கார்த்திக் மீது அவர் குற்றம் சாட்டியிருக்கிறார். இருவரும் இணைந்திருப்பது போன்ற புகைப்படத்தையும் போலீஸில் அவர் ஒப்படைத்துள்ளார்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக், தன் மீதான குற்றச்சாட்டு போலியானவை. மைத்ரி என்ற பெண்ணை தனக்கு தெரியாது என்றார்.
இதேபோல், அமைச்சர் சதானந்த கவுடாவும் தன் மகன் மீதான குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளார். தனது வாழ்க்கை எப்போதும் ஒரு திறந்த புத்தகமாக இருந்ததாக கூறிய அவர் தனது பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்பதற்காகவே சில விஷமிகள் இவ்வாறு செய்துள்ளதாகவும் கூறினார்.
சதானந்த கவுடா மகனின், திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த சில மணிநேரத்தில் நடிகை ஒருவர் அவர் மீது குற்றம் சாட்டி இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.