Published : 18 Oct 2018 06:36 PM
Last Updated : 18 Oct 2018 06:36 PM

விமானத்தில் பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு: இறக்கிவிடப்பட்டு பயணி கைது

மும்பையில், விமானத்தில் பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டு கைது செய்யப்பட்டார்.

பெங்களூருவைச் சேர்ந்த ராஜு கங்கப்பா வயது (28). மும்பையில் இருந்து கடந்த செவ்வாய் கிழமை பெங்களூருக்கு இண்டிகோ விமானத்தில் ஏறி அமர்ந்துள்ளார். அப்போது விமான பெண் ஊழியர் ஒருவர் அவரது அங்கு இருந்துள்ளார்.

அந்த வழியாக சென்ற ராஜு, பெண் ஊழியர் மீது கையை வைத்து பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். அந்த பெண் உடனடியாக அந்த இடத்தை கடந்து சென்று விட்டார். பின்னர் திரும்பி வரும்போதும், அதேபோன்று அந்த பெண் ஊழியரை தவறான எண்ணத்துடன் ராஜு சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் உடனடியாக விமானத்தில் இருந்து மற்ற ஊழியர்களிடம் சென்ற நடந்த சம்பவங்களை கூறியுள்ளார்.

இதையடுத்து மும்பை விமான நிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்டு ஊழியர்கள் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து தொழிலக பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து விமானத்தில் ஏறி ராஜுவை அவரது உடமைகளுடன் கீழே இறக்கியுள்ளனர். பின்னர் விமானம் புறப்பட்டுச் சென்றது.

இதையடுத்து ராஜு மும்பை விமான நிலை காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். போலீஸார் ஐபிசி 354வது பிரிவின் கீழ் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது, இழுக்கு ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x