சரஸ்வதி நதி பற்றி ஆராய நடவடிக்கை: மத்திய அமைச்சர் உமா பாரதி தகவல்

சரஸ்வதி நதி பற்றி ஆராய நடவடிக்கை: மத்திய அமைச்சர் உமா பாரதி தகவல்
Updated on
1 min read

சரஸ்வதி நதி குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி கூறினார்.

பாஜக உறுப்பினர் ரத்தன் லால் கட்டாரியா மக்களவையில் பேசும்போது, சரஸ்வதி ஆய்வு மையத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அதற்கு பதிலளித்து அமைச்சர் உமா பாரதி பேசியதாவது: “சரஸ்வதி ஒன்றும் புராணங்களில் கூறப்படும் கற்பனை நதி அல்ல. அந்த நதி இருந்ததற்கான ஆதாரங் கள் இப்போது கிடைக்க தொடங்கி யுள்ளன. இந்த நதி தொடர்பாக குஜராத்தில் ஆராய்ச்சிகள் நடைபெற்றுள்ளன.

பழங்காலத்தில் இமயமலையி லிருந்து வந்த பல நதிகளுக்கு சரஸ்வதி என்றே பெயரிடப்பட்டி ருந்தது. அதில் ஒரு நதிதான் அலகாபாத் பகுதியில் திரிவேணி நதியுடன் சங்கமித்துள்ளது. இரண் டாவது மந்தாகினி நதியுடனும், மூன்றாவது அலாக்நந்தா நதி யுடனும் இணைந்துள்ளது.

சரஸ்வதி என்ற பெயரில் ஹரியாணாவிலிருந்து ராஜஸ்தான், குஜராத் வழியாக நதியொன்று ஓடியுள்ளது.எனவே, சரஸ்வதி நதியின் மூலத்தைக் கண்டறியும்படி யும், அந்நதி ஓடி வந்த பாதைகள் குறித்த தகவலை சேகரிக்குமாறும் நிலத்தடி நீர் ஆராய்ச்சித்துறை அதிகாரிகளை கேட்டுக்கொண் டுள்ளேன் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in