

விஜயதசமி அன்று நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் தலைமை விருந்தாளியாகக் கலந்து கொள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பு விடுத்த அழைப்பை நோபல் அமைதிப் பரிசு வென்ற கைலாஷ் சத்யார்த்தி ஏற்றுக் கொண்டுள்ளார்.
அக்டோபர் 18ம் தேதியன்று விஜயதசமி பண்டிகையாகும். ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிகளில் அதிகம் பேர் ஆவலுடன் எதிர்பார்ப்பது இந்த விஜயதசமி பண்டிகையாகும், இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ்.தலைவர் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கம்.
கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீர், மற்றும் பசுப்பாதுகாப்புப் படை பற்றி அவர் மோகன் பாகவத் பேசினார்.
1925ம் ஆண்டு விஜயதசமி பண்டிகைத் தினத்தன்றுதான் கேஷவ் பாலிராம் ஹெட்கேவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைத் தொடங்கினார்.
கடந்த ஆண்டு நிர்மல்தாஸ் மஹராஜ் என்ற தலித் சீக்கிய சமயத் தலைவர் தலைமை விருந்தாளியாக பங்கேற்றார், இவர்தான் முதல் தலித் தலைமை விருந்தாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு ஏன் சத்யார்த்தி அழைக்கப்பட்டார், என்ற கேள்விக்கு ஆர்.எஸ்.எஸ். சார்பாக பதில் அளிக்கும் போது, சத்யார்த்தி சமூக நலன்களுக்காகப் பாடுபடுபவர். அவரது அமைப்பு குழந்தைகளை சட்டவிரோத சுரண்டல் மற்றும் கடத்தலிலிருந்து காப்பாற்றி வருகிறது என்றார்.