Published : 12 Oct 2018 12:48 PM
Last Updated : 12 Oct 2018 12:48 PM

குடும்பத்தினரையே பலிவாங்கிய ஆன்லைன் விளையாட்டு: கல்லூரி மாணவர் வெறிச்செயல்

ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான டெல்லி இளைஞர் ஒருவர் தனது குடும்பத்தினர் அனைவரையும் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் தனது கல்லூரி வகுப்புகளை முடித்துக்கொண்டு மெஹ்ராலி நகரில் வாடகைக்கு எடுத்துள்ள தனது அறையில் நீண்ட நேரம் செலவிடுபவராம்.

நேற்று முன்தினம் (புதன்கிழமை) காலையில் தனது தந்தை மிதிலேஷ், தாய் சியா மற்றும் சகோதரி ஆகியோரைக் கொலைசெய்ததாக சுராஜ் (என்கிற) சர்னம் வர்மா (19) நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட சுராஜ், தான் கொலை செய்ததற்கான அடையாளம் எதுவும் சம்பவ இடத்தில் இல்லாததால், 'என்னை சட்டத்தில் இருந்து காப்பாற்றவும்' என்று தொடர்ந்து கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சுராஜின் தனது 9 முதல் 10 நண்பர்களையும் விசாரணையில் இணைத்துக்கொள்ளும்படி அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆனால் தொடர்விசாரணையில் அவர் தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.

கொலை செய்யப்பட்ட அவரது குடும்பத்தினருக்கு நேற்று இறுதிச்சடங்கு செய்யப்பட உள்ள நிலையில் இறுதிச் சடங்குகளை முடிப்பதற்காக சுராஜூக்கு அனுமதி வழங்கும்படி அவரது உறவினர்கள் யாரும் நீதிமன்றத்திடம் அனுமதி கோரவில்லை. மிதிலேஷின் சகோதரர் மற்றும் மருமகன் இறுதி சடங்குகளைச் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கல்லூரி மாணவர் சுராஜ் தனது குடும்பத்தினரை கொன்றது குறித்து விசாரணையில் தெரியவந்த விவரம் வருமாறு:

வாட்ஸ்அப் நண்பர்கள்

விசாரணையில், வாட்ஸ்அப் குழுவில் சுராஜூக்கு பெண்கள் உள்ளிட்ட 10 நண்பர்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். அதில் அவர்கள் தங்கள் வகுப்புகளைப் பற்றியும் வெளியில் செல்வதற்கு திட்டமிடுவதைப் பற்றியும் பேசிக்கொள்வது வழக்கம்.

அவருடைய நண்பர்கள் அவரை ஒரு முக்கிய அடையாளமாகக் கருதியதோடு அவரிடமே எதையும் பரிசீலனை செய்வார்கள். அவர் தனது நண்பர்களோடு நேரத்தை செலவிடுவதற்காக மெஹ்ராலியில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்துள்ளார். அறையில் அவர்கள் ஒரு டிவி அமைத்துள்ளனர். சுராஜூக்கு வகுப்பு செல்ல விருப்பமில்லை எனில் காலையில் ஏழுமணிக்கே இங்கே வந்துவிடுவார் மாலை 6 மணிவரை பியூபிஜி எனப்படும் ஆன்லைன் விளையாட்டில் மூழ்கிவிடுவார்.

குடும்பத்தினர் கண்டிப்பு

குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்கள் கூறியபோது, சுராஜ் அமைதியானவர் ஒழுக்கமானவர் என்றுதான் தாங்கள் உணர்ந்ததாக தெரிவித்தனர். ஆனால் அண்டை வீட்டுக்காரர்கள் தெரிவிக்கையில், சுராஜின் நடத்தையைப் பற்றி குறிப்பிட்டு அவரது குடும்பத்தினர் சண்டைபோடுவது அவரது வீட்டிலிருந்து அடிக்கடி சத்தமாக கேட்கும் என்று தெரிவித்தனர்.

சுதந்திர தினத்தன்று வானில் பட்டம் பறக்கவிட்டதற்காக குடும்பத்தினர் அவரை கடுமையாக கண்டித்துள்ளனர். கண்டிப்பினால் சஞ்சலமடைந்த சுராஜ் அவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டுமென்ற திட்டம் உருவானது.

புறக்கணிப்பினால் ஏற்பட்ட வெறுப்பு

அவரது பெற்றோர்கள் அவரது வாழ்க்கைமுறை மற்றும் படிப்பில் விருப்பமில்லாமல் இருப்பது குறித்து ஆட்சேபனை எழுப்பிய பின்னர் அவர் அவர்களை வஞ்சம் தீர்க்கும் எண்ணத்தோடு இருந்தார். அவர் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாமல்போனதற்கு அவர்கள் அவரை திட்டியுள்ளனர்.

வீடு கட்டும் பணிகளை மேற்பார்வை செய்யும்படி அவரது தந்தை கேட்டுக்கொண்டதாலேயே தான் பொதுத் தேர்வில் தோல்வியடைய வேண்டி வந்தது. என்று குற்றஞ்சாட்டிய சுராஜ் இதற்காக வருந்தியதாகவும் விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

தன் மகனை சிவில் இன்ஜினீயரிங் டிப்ளமா படிக்கவைத்து ஒரு கட்டிட காண்ட்ராக்டர் ஆக உருவாக்க வேண்டுமென விரும்பி குர்கானில் உள்ள ஒரு தனியார் இன்ஸ்டிடியூட்டில் அவரை தந்தை சேர்த்துவிட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

தன்னை விட அவரது சகோதரியையே பெற்றோர்கள் அதிகம் விரும்பியதை அவர் உணர்ந்தள்ளார். அதனால் தனது சகோதரனின் நடவடிக்கைகள் குறித்து தெரிந்திருந்தும் அவரது தனிப்பட்ட தகவல்கள் தனது பெற்றோருக்கு கசிவதை தான் விரும்பாததால் அவர் அமைதியாக இருந்துள்ளார்.

வஞ்சம் தீர்க்க உதவிய ஆன்லைன் விளையாட்டு

பல்வேறு பிரச்சினைகளை அலைக்கழித்த நிலையில் அவர் தனது குடும்பத்தினரை வெறுக்கத் தொடங்கினார். இந்த வெறுப்பு தனது குடும்பத்தினரையே எதிரியாக கருதத் துணிந்ததற்கு ஆன்லைவிளையாட்டே காரணம் என தெரியவந்துள்ளது.

தொடர்ந்து கல்லூரிக்குச் செல்லாமல் நண்பர்களை சந்திக்க மெஹ்ராலியில் வாடகைக்கு எடுத்த அறையிலேயே ஒவ்வொரு நாளும் தனது நேரத்தை செலவிட்டார். அதில் முக்கியமாக PUBG எனப்படும் கொலைவெறியில் பழிவாங்கும் ஆன்லைன் விளையாட்டில் அவர் மூழ்கினார். அதில் தன் மனநிலைக்கேற்ப எதிரியை பழிவாங்கும் பல்வேறு உத்திகளால் தீய சிந்தனையில் ஊக்கம் பெற்ற சுராஜ் தன் தாய் தந்தையரை கொல்ல நேரம் பார்த்திருக்கிறார்.

நள்ளிரவு வரை விழிப்பு

சம்பவத்தன்று படுகொலைகளை செய்வதற்கு முன்னர், இரவு அவரது பெற்றோருடன் புகைப்பட ஆல்பங்களைப் பார்த்தபடி சாதாரணமாகத்தான் இருந்த சுராஜ் நள்ளிரவில் உறங்கியுள்ளார்.

அதிகாலை 3 மணியளவில் விழித்துக்கொண்டு தனது தந்தையை பல முறை கத்தியால் குத்தியுள்ளார். அதே அறையில் தூங்கிக்கொண்டிருக்கும் அவரது தாயார் ஒரு எச்சரிக்கையாக சத்தம் எழுப்பியதாகவும், ஆனால் அவரை ஒருமுறை மட்டும் குத்தியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் தனது சகோதரியின் அறைக்கு வந்து சகோதரியின் கழுத்தில் குத்தினார். அவரது தாய் அங்கே வந்து தனது மகளின் உயிரைக் காப்பாற்ற முயன்றபோது அவரை மீண்டும் கத்தியால் குத்திவிட்டு சகோதரியின் வயிற்றிலும் குத்தியுள்ளார்.

அதன்பிறகு வீட்டில் உள்ளவற்றை சூறையாடியுள்ளார். பின்னர் கத்தியில் படிந்த தனது கைரேகைகளை கழுவி சுத்தம் செய்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு

சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னை யாரோ கடத்திவிட்டதாக போலி நாடகம் ஒன்றை அரங்கேற்றிய சுராஜின் செயலை குடும்பத்தினர் யாரும் கண்டுகொள்ளவில்லை.அதன்பிறகு பணமில்லாமல் எப்படி வாழ்வது என்பது குறித்து அவர் அதிகம் யோசிக்கத் தொடங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x