

தென்னிந்திய நடிகை ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான வழக்கில் நடிகர் திலீப் கடந்த 2017 பிப்ரவரியில் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் திலீப் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நடிகைக்கு எதிராக ‘அம்மா’ பாகுபாடு காட்டுவதாக திரையுலக பெண்கள் கூட்டமைப்பு (டபுள்யுசிசி) புகார் கூறியது. இதையடுத்து 'அம்மா' தலைவர் மோகன்லால் கடந்த 19-ம் தேதி அளிக்க விளக்கத்தில், “டபிள்யுசிசி உறுப்பினர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் திலீபுடன் பேசி அவரது ராஜினாமா பெறப்பட்டது” என்றார். இந்நிலையில் நடிகர் திலீப் தனது முகநூல் பக்கத்தில், “அம்மா அமைப்பிலிருந்து நானாக விலகினேன். என்னை விலகும்படி சங்கம் கோரவில்லை. சர்ச்சைகளையும் சங்கத்திற்கு எதிரான சதிகளையும் முறியடிக்க இந்த முடிவுக்கு வந்தேன்” என கூறியுள்ளார்.