Last Updated : 30 Oct, 2018 09:58 PM

 

Published : 30 Oct 2018 09:58 PM
Last Updated : 30 Oct 2018 09:58 PM

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும்: கேரள காங்கிரஸுடன் முரண்படும் ராகுல் காந்தி

சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களையும் வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

கேரளாவில் உள்ள காங்கிரஸ் கட்சி சபரிமலை ஐயப்பன் கோயில் பாரம்பரியம் காக்கப் பட வேண்டும் என்று கூறி வரும் கேரள காங்கிரஸ் கட்சிக்கு முரண்பட்டு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தூரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் சபரிமலை விவகாரத்தில் உங்களின் கருத்து என்ன என்று நிருபர்கள் கேட்டனர் அதற்கு ராகுல் கூறுகையில், “இது மிகவும் உணர்வுப்பூர்வமானவிஷயம். என்னுடைய தனிப்பட்ட கருத்து என்பது கேரள காங்கிரஸ் கட்சியில் இருந்து வேறுபட்டு இருக்கும்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வழிபாடு செய்ய அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும். கேரள மாநிலத்தில் உள்ள என்னுடைய காங்கிரஸ் கட்சி அந்த மண்ணின் மக்களின் உணர்வுகளுக்கு ஏற்க இந்த விஷயத்தை அணுகுகிறார்கள். ஆதலால், இந்த விஷயத்தில் என்னுடைய கருத்து வேறு, கேரள காங்கிரஸ் கட்சியின் கருத்து வேறு.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் விசாரணை நடத்தப்பட்டால் மோடி நிச்சயம் சிறைக்கு செல்வார். அனைத்துவிதமான விதிமுறைகளும் மீறப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தில் ஆதாயம், லாபம் அடைந்தவர் அனில் அம்பானி மட்டுமே.

பாஜக தவறான கொள்கையால் பாகிஸ்தான் தீவிரவாத செயல்களை அதிகமாக ஊக்குவிக்கிறது. பாஜகவின் கொள்கைகளால்தான் இந்திய வீரர்கள் ஏராளமானோர் எல்லையில் உயிர்த்தியாகம் செய்கிறார்கள். ஊழல், வேலைவாய்ப்பு, விவசாயிகள் பிரச்சினை ஆகிய எதையும் சரியாக கையாளுவதில் மோடி அரசு தோல்வி அடைந்துவிட்டது” எனத் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x