Last Updated : 21 Oct, 2018 03:59 PM

 

Published : 21 Oct 2018 03:59 PM
Last Updated : 21 Oct 2018 03:59 PM

இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விடுத்தால், இரட்டை வலியுமையுடன் பதிலடி: பிரதமர் மோடி எச்சரிக்கை

இந்திய இறையாண்மைக்குக்கு அச்சுறுத்தல் விடுப்பவர்களுக்கு இரட்டை வலியுடன் நாம் பதிலடி தரப்படும் என்று பிரதமர் மோடி ஆவேசத்துடன் தெரிவித்தார்.

ஆசாத் இந்து சர்க்காரின் 75-வது ஆண்டுவிழா டெல்லியில் இன்று நடந்தது. இதில் டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்திய பிரதமர் மோடி அதன்பின் உரையாற்றினார். அவர் பேசியதாவது:

சுதந்திரப் போராட்டத்தில் இந்திய ராணுவத்தின் பங்களிப்பை யாரும் மறக்க முடியாது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஷின் கனவின்படி, இந்திய ராணுவம் தொடர்ந்து நவீனப்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் இன்னும் நேதாஜியின் கனவுகள் முழுமையாக நிறைவடையவில்லை. சுதந்திரத்துக்குப்பின், இந்தியா பல்வேறு முக்கிய மைல்கல்லைக் கடந்து முன்னோக்கி சென்று வருகிறது, ஆனால், புனிதமான புதிய உச்சத்தை இன்னும் அடையவில்லை.

ஆனால், இந்த இலக்கை அடைய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணி உறுதிபூண்டுள்ளது. பல்வேறு சக்திகள் நம்மீது தாக்குதல் நடத்திபோதிலும் கூட புதிய இந்தியா எனும் இலக்கு மூலம் அடைவோம். புதிய இந்தியா என்பது, நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ் என்ன நினைத்தாரோ, உருவகமாக்கினோரோ அதுதான்.

நேதாஜியால் ஈர்க்கப்பட்ட ஒவ்வொரு இந்தியரும், நமக்கு எதிரான சக்திகளுடன் போரிட்டு, அவர்களைத் தோற்கடித்து, நாட்டின் கட்டமைப்புக்கு முழு அளவில் பங்களிப்பு செய்வது கடமையாகும்.

ஆனால், கடந்த காலங்களில் இருந்த அரசு ஆங்கிலேய மனப்பான்மையுடன் இருந்து விட்டது. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்தபின் அந்த நோக்கத்தை மாற்றி இருக்கிறது.

நேதாஜியின் நோக்கத்தின்படி,நாட்டின் இறையாண்மை மிகவும் முக்கியம். நாட்டின் இறையான்மைக்குக்கு அச்சுறுத்தல் விடுத்தால், அவர்களை இரட்டை வலிமையுடன் பதிலடிகொடுப்போம்.

நேதாஜி கண்ட கனவின்படி இந்தியா ராணுவத்தை உருவாக்கி வருகிறது, அதை நோக்கி நகர்கிறது என்று நான் கூறுவேன். நம்முடைய ராணுவத்தில் நவீன தொழில்நுட்பங்கள், நவீன ஆயுதங்கள், தளவாடங்கள் போன்றவை கலந்து உள்ளன. நம்முடைய ராணுவத்தின் வலிமை என்பது சுயபாதுகாப்புதான், இது எதிர்காலத்திலும் தொடர்ந்து இருக்கும்.

இந்தியா ஒருபோதும் மற்றவர்களின், மற்ற நாடுகளின் நிலத்தை ஆக்கிரமிக்கும் பேராசையுடன் செயல்பட்டது கிடையாது. அந்த எண்ணம் இந்தியர்களுக்கும், இந்தியாவுக்கும் இல்லை. கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்பை வலுப்படுத்த பாஜக அரசு அதிகம் உழைத்துள்ளதாகவும், சர்ஜிகல் ஸ்ட்ரைக் போன்ற முடிவுகளை எடுக்கும் சக்தி இந்த அரசுக்கு மட்டுமே இருக்கிறது .

நேதாஜி அனைத்து மக்களுக்கும் சம உரிமை மற்றும் சம வாய்ப்பு அளிக்கப்படும் என உறுதி கொண்டு இருந்தார். முக்கியமாக வடகிழக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களுக்கு அங்கீகாரம் கிடைக்காததால் அவற்றின் மீது கவனம் செலுத்தினார். தற்போதைய பாஜக அரசும் அத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x