

சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த தொகுதியான வதோதராவில் பிரச்சாரம் செய்வதற்கான விளம்பரச் செலவு ரூ.40,000.
சோனியா காந்திக்கு கார்ப்ரேட் நிறுவனங்களிடமிருந்து நன்கொடை எதுவும் கிடைக்கவில்லை.
அரவிந்த் கேஜ்ரிவால் தனது பணத்திலிருந்து எதுவும் செலவழிக்கவில்லை. நந்தன் நிலேகனி செலவழித்தது அனைத்தும் தனது சொந்த பணம்தான். - இவை அனைத்தும் தேர்தல் ஆணையத்திடம் வேட்பாளர்கள் சமர்ப்பித்த தேர்தல் செலவினங்களின் அறிக்கைப்படி தி இந்து (ஆங்கிலம்) ஆராய்ந்த ஆய்வின் முடிவில் கண்டறியப்பட்ட தகவல்களாகும்.
தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் முடிவுகள் அறிவித்த நாளிலிருந்து 30 நாட்களுக்குள், தாங்கள் செலவழித்த தேர்தல் பணத்தின் கணக்கு குறித்த முழு விவரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். இதன்படி, பிரதமர் நரேநந்திர மோடி தனது வடோதரா தொகுதியில் ரூ.50 லட்சமும், வாரணாசி தொகுதியில் ரூ.38 லட்சமும் செலவழித்துள்ளார். அதே வேளையில், தோற்ற ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கேஜ்ரிவால் ரூ. 50 லட்சத்திற்கு மேல் செலவழித்துள்ளார். காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தனது ரேபரேலி தொகுதிக்கு, ரூ.31 லட்சமும், ராகுல் காந்தி ரூ.39 லட்சமும் செலவழித்துள்ளனர்.
இதில், முன்ணணி வேட்பாளர்கள் அனைவருக்கும் அவர்களின் கட்சியே மொத்த பணமும் செலவழித்துள்ளது, இருவரை தவிர - நந்தன் நீலேகனி மற்றும் முலாயம் சிங் யாதவ். தெற்கு பெங்களூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு தோற்றுப்போன நந்தன் நீலேகனி தனது சொத்திலிருந்து ரூ.70 லட்சம் செலவழித்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் தனது மென்பூரி தொகுதிக்கு ரூ.45 லட்சம் சொந்தமாக செலவழித்துள்ளார் என்றும், தனது அசாம்கார் தொகுதிக்கு கட்சியிலிருந்து ரூ.50 லட்சமும் செலவழித்துள்ளார்.
வதோதரா தேர்தல் பிரச்சாரத்தில் நரேந்திர மோடி தேநீருக்கு மட்டும் செலவு செய்தது ரூ.3.2 லட்சம். தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் சுப்ரியா சுலே தானியங்கி தொலைபேசி அழைப்புகளுக்கு மட்டும் ரூ.2 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது.
கேஜ்ரிவால் மொத்தம் 200 வாகனங்களை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்த சோனியா காந்தி பூக்களுக்கு மட்டும் ரூ.15,000 செலவு செய்துள்ளார்.