Last Updated : 29 Oct, 2018 01:03 PM

 

Published : 29 Oct 2018 01:03 PM
Last Updated : 29 Oct 2018 01:03 PM

வட இந்தியாவை அச்சுறுத்தி வந்த கொள்ளையர்கள் 8 பேர் கூண்டோடு சிக்கினர்; 5 லட்சம் பணம், கார், துப்பாக்கிகள் பறிமுதல்

வட இந்தியாவை அச்சுறுத்திய, நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த நெடுஞ்சாலைக் கொள்ளையர்கள் எட்டுப் பேர் கூண்டோடு பிடிபட்டனர். அவர்களிடமிருந்து ரூ.5 லட்சம் பணம் மற்றும் சில பொருட்களையும் துப்பாக்கிகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இது பற்றி உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ''வட இந்தியாவை அச்சுறுத்தி வந்த நெடுஞ்சாலை கொள்ளைக் கும்பல் ஒன்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிடிபட்டுள்ளது. இக்கும்பல் பெரும்பாலும் ஹரியாணா, உத்தரகாண்ட், மற்றும் மேற்கு வங்கத்தில் கொள்ளையடித்து வந்தது.

இக்கூட்டம் முசாபர் நகர், ராம்பூர், மொராதாபாத், ஹப்பூர், பாஸ்டி, பிஜ்னோர், மீரத் போன்ற நகரங்களை நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலைகளில் தொடர்ந்து மக்களிடம் வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்டு வந்தது. நேற்று இவர்களது நடமாட்டம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது. இதில் செயல்பட்டு வந்த 8 பேரும் கைதாகியுள்ளனர்.

இவர்களிடமிருந்து ரூ.5 லட்சம் பணம், 335 பார்சல்களில் காஸ்மெட்டிக் பொருட்கள், ஒரு கார் மற்றும் 4 துப்பாக்கிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன'' என்று தெரிவித்தார்.

இரண்டு வாரங்களுக்கு முன் நடந்த ஒரு கொள்ளைச் சம்பவமே நேற்று கொள்ளையர்கள் கூண்டோடு அழிக்கப்பட காரணமாக இருந்தது என்று சொல்லப்படுகிறது.

முசாபர் நகரில் இரண்டு வாரங்களுக்கு முன் சரக்கு ஏற்றிவந்த ஹிந்துஸ்தான் யுனிலெவர் லாரியை இக்கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர். அப்போது, போலீஸார் நெடுஞ்சாலைகளில் மோட்டார் வாகனங்களைக் கண்காணிக்கும் கருவியான போலீஸ் ரேடார் இதைப் படம் பிடித்துள்ளது. இதைக் கண்ட போலீஸார் அவர்களைத் தீவிரமாக தேடும் படலத்தில் இறங்கினர்.

சமீபத்தில், காஸியாபாத் மற்றும் நொய்டாவிலிருந்தும் இவர்கள் லாரிகளில் ஏற்றிச் செல்லப்பட்ட 335 பார்சல்களைக் கொள்ளையடித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x