Last Updated : 31 Aug, 2018 11:45 AM

 

Published : 31 Aug 2018 11:45 AM
Last Updated : 31 Aug 2018 11:45 AM

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய எதிர்ப்பு: போராட்டத்தால் வெறிச்சோடிய சாலைகள்

காஷ்மீர் மாநிலத்தில் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு  35ஏவை நீக்க எதிர்ப்புத் தெரிவித்து பிரிவினைவாதிகள் கடையடைப்புப் போராட்டம்  நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சையத் அலி ஷா கிலானி, மிர்விஸ் உமர் ஃபரூக் மற்றும் யாசின் மாலிக் தலைமையிலான பிரிவினைவாதிகளின் கூட்டமைப்பு 35ஏ அரசியல் சட்டப்பிரிவை நீக்க எதிர்ப்புத் தெரிவித்து வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.

தலைநகர் ஸ்ரீநகர் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கின் மற்ற பகுதிகளிலும் அனைத்து கடைகள், பொதுப்போக்குவரத்து, வியாபாரம் மற்றும் கல்வி நிறுவனங்கள் முடங்கியுள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

போக்குவரத்து வசதி ஸ்தம்பித்துள்ளதால் அரசு அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் ஊழியர்களின் வருகை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற இருந்த முதுகலைப் பட்டப் படிப்புக்கான தேர்வுகள் வேறுதினங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாரமுல்லா மற்றும் பன்னிஹால் நகரங்களில் ரயில் போக்குவரத்து இரண்டாவது நாளாக பாதிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க பல பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவத்துள்ளது- கான்யார், ராய்னாவாரி, நோவட்டா, எம்.ஆர்.குஞ்ச், சபா கடால், க்ரல்குந்த் மற்றும் மெய்சுமா ஆகிய பகுதிகளில் பொதுஇடங்களில் மக்கள் கூடுவதற்கு தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் தடைவிதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்குரிய பகுதிகளில் காவல் படையும் துணை ராணுவப் படையும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளன.

அரசியலமைப்பின் 35-வது பிரிவு ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் காஷ்மீரில் நிரந்தர குடியுரிமை பெறவும் நிலம் வாங்குதல் உள்ளிட்ட சிறப்பு உரிமைகளுக்கு தடை விதிக்கிறது. இச்சட்டத்தை நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இப்பிரச்சினை மிகுந்த சவாலை எதிர்நோக்கியுள்ள நிலையில், 35 ஏ தொடர்பான வழககு உச்ச நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x