

மகாராஷ்டிர மாநில கூட்டுறவுத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பாட்டீல் மீது போராட்டக்காரர்கள் வெள்ளிக்கிழமை மை வீசியதால் அவரது கண் பாதிக்கப்பட்டுள்ளது.
தங்களை பழங்குடி வகுப்பினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி தாங்கர் வகுப்பினர் போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், புனே மாவட்டம் இந்தாபூர் வட்டம் பிக்வான் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மீது, தாங்கர் வகுப்பினர் மை வீசி உள்ளனர். இதனால் அமைச்சரின் இடது கண்ணில் எரிச்சல் ஏற்பட் டுள்ளது. இதையடுத்து, அருகில் உள்ள பாராமதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். புனேவில் உள்ள மருத்துவமனையில் கண்ணை பரிசோதனை செய்து கொள்ளுமாறு அவருக்கு மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்