

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறப்பு சலுகைகள் தருவதற்கும் வி.ஐ.பி. அந்தஸ்து அளிப்பதற்கும் ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவர் தரம்வீர் காந்தி திங்கள்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:
அரசியல் சட்டத்தின் 105, 106, 107 ஆகிய பிரிவுகள் எம்.பி.க்களுக்கு சில முன் னுரிமைகளை அளித்துள்ளது. அது அவர்கள் தங்களுடைய கடமையை திறமையாகவும் விரை வாகவும் நிறைவேற்றுவதற்கு அவசியம் தேவை. ஆனால் அவர்களுக்கு தேவையற்ற ஆடம்பர சலுகைகளை அளிக்க வேண்டியதில்லை. இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கூடுதல் உரிமைகளையும் சலுகைகளையும் கோரியுள்ளனர். இதை எங்களது கட்சியின் 4 உறுப்பினர்களும் வன்மையாகக் கண்டிக்கிறோம். பொதுமக்களின் வரிப்பணத்திலிருந்து அவர்களுக்கு கூடுதல் சலுகைகள் அளிப்பதால் சமுதாயத்துக்கு எந்த வகையிலும் பயன் ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.