

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 2 பேருக்கு மத்தியபிரதேச நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் மன்ட்சோர் பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் கடந்த ஜூன் மாதம் 26-ம் தேதி கடத்தப்பட்டார். சிறுமியைக் கடத்திய நபர்கள், அவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் அவரது கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டி வீசிவிட்டுச் சென்றுவிட்டனர்.
இதைத் தொடர்ந்து சிறுமி மீட் கப்பட்டு தற்போது இந்தூரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் 2 பேரைக் கைது செய்தனர்.
இந்த வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி நிஷா குப்தா முன்னிலையில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலை யில் தீர்ப்பை நீதிபதி நேற்று வழங்கினார். அதன்படி குற்றம் சாட்டப்பட்ட இர்பான் (20), ஆசிப் (24) ஆகியோருக்கு மரண தண் டனையை நீதிபதி அறிவித்தார்.
12 வயதுக்குட்பட்ட சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப் படும்போது குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கும் புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மரண தண்டனையை நீதிபதி வழங்கினார் என அரசு வழக்கறிஞர் பி.எஸ்.தாக்குர் தெரிவித்தார். - பிடிஐ