Published : 30 Aug 2018 08:49 AM
Last Updated : 30 Aug 2018 08:49 AM

சமூக வலைதளங்களில் நல்ல விஷயங்களை பகிர வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்

சமூக வலைதளங்கள் மூலம் அழுக்கைப் பரப்ப வேண்டாம் என்று மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் தனது தொகுதியான வாரணாசியைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள், தன் னார்வ தொண்டர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலிக் காட்சி மூலம் உரையாடினார். அவர்களது கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:

சில நேரங்களில் மக்கள் நெறி முறைகளைத் தாண்டிச் செல்கின்ற னர். அவர்கள் பார்க்கும் அல்லது கேட்கும் பொய்யான விஷயங் களை அப்படியே சமூக வலை தளங்கள் மூலம் மற்றவர்களுக்கு பகிர்ந்துவிடுகின்றனர். இதனால், சமுதாயத்துக்கு எவ்வளவு சேதத்தை விளைவிக்கிறோம் என் பதை அவர்கள் பார்ப்பது இல்லை. சிலர் எந்த ஒரு கண்ணியமான சமுதாயத்துக்கும் பொருந்தாத வார்த்தைகளைப் பயன்படுத்து கின்றனர். பெண்களைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசவும், எழுதவும் செய்கின்றனர்.

இந்த பிரச்சினை எந்த ஒரு அரசியல் கட்சியையோ அல்லது சித்தாந்தத்தையோ சேர்ந்தது இல்லை. 125 கோடி இந்தியர் கள் சம்பந்தப்பட்டது. சமூக வலை தளங்கள் மூலம் அழுக்கை பரப்பக் கூடாது என்பதை ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டும். தூய்மை இந்தியா திட்டம் என்பது வெறும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருப்பது மட்டுமல்ல; மனத் தையும் தூய்மையாக வைத்திருப் பதாகும். தங்களைச் சுற்றியுள்ள நல்ல விஷயங்களை சமூக வலை தளங்களில் மக்கள் பகிர வேண் டும். நமது நாட்டைப் பற்றிய நேர்மறையான செய்திகளை, சமூ கத்தை பலப்படுத்தும் தகவல்களை பகிர்ந்துகொள்ள வேண்டும்.

நாடு இப்போது முன்னெப்போ தும் இல்லாத வகையில் வர லாற்று முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றத்தைக் கண்டுவரு கிறது. இந்தியாவின் மாறிவரும் வளர்ச்சியின் முகம் பற்றிய வீடி யோக்களை பகிருங்கள். நாட்டின் எல்லா கிராமமும் மின்வசதி, பள்ளி கள், கழிவறை வசதிகளைப் பெற்றுள்ளது.

மிகப்பெரிய அளவில் செல் போன் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியாஉருவாகியுள்ளது. பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. விமானச் சந்தையும் வேகமாக வளர்கிறது. ஏசி ரயில்களில் பயணிப்பதை விட அதிகமான மக்கள் விமானங்களில் பறக்கின்றனர். இந்த வளர்ச்சிகள் ஒவ்வொரு இந்தியனையும் பெரு மையடையச் செய்யும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x