டெல்லியில் பெண்களுக்கு ஹெல்மெட் கட்டாயம்: தேர்தலுக்கு பிறகு அமலாகிறது

டெல்லியில் பெண்களுக்கு ஹெல்மெட் கட்டாயம்: தேர்தலுக்கு பிறகு அமலாகிறது
Updated on
1 min read

டெல்லியில் இருசக்கர வாகனம் ஓட்டும் பெண்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிமுறை விரைவில் அமலுக்கு வரவுள்ளது.

மோட்டார் வாகனச் சட்டப்படி, இருசக்கர வாகனம் ஓட்டுவோர், பின்னால் உட்கார்ந்து செல்வோர் ஆகிய இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும். ஆனால், டெல்லியில் பிரிவு 115-ன் கீழ், சீக்கியர்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு ஹெல்மெட் அணிவதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நாள் ஒன்றுக்கு இரு வாகன ஓட்டிகள் உயிரிழப் பதாக ஆய்வில் தெரியவந்துள் ளதால், வாகனம் ஓட்டும் பெண்களுக்கும் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க டெல்லி போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.

இந்த நடவடிக்கைக்கு டெல்லி ஆளுநர் நஜீப் ஜங் ஒப்புதல் அளித்துள்ளார். தற்போது தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்கு இந்த முடிவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆணையம் ஒப்புதல் அளித்ததும், இந்த உத்தரவு அமல்படுத் தப்படும்.

இதுகுறித்து டெல்லியைச் சேர்ந்த அங்கிதா கூறும்போது, “டெல்லி போக்குவரத்து துறையின் முடிவு நல்ல விஷயம். விபத்து ஏற்படும்போது ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லை. பாதுகாப்பு அவசியம் என்பதால், பெண்களும் ஹெல்மெட் அணிவது நல்லதுதான்” என்றார்.

தமிழகத்தில், 2007-ம் ஆண்டு போக்குவரத்து துறை அரசாணைப்படி, சீக்கியர்கள், மெய்வழி சபை உறுப்பினர்கள், பின்னால் உட்கார்ந்து செல்லும் பெண்கள், குழந்தைகளுக்கு மட்டும் ஹெல்மெட் அணிவதில் இருந்து விதிவிலக்கு அளிக்கப் பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in