

பிஹாரில் பலாத்காரக் குற்றச்சாட்டு களுக்கு உள்ளான இரண்டு ஆதர வற்றோர் காப்பகங்களுக்கு நிகழாண்டுக்கான நிதியுதவி ரத்து செய்யப்படுவதாக மலாலா நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெண்களின் கல்வி உரிமைக் காக குரல் கொடுத்து வருபவர் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசப்சாய். உலகம் முழுவதும் ஒடுக்கப்பட்ட நிலையில் இருக் கும் பெண்கள், கல்வியறிவு பெறு வதற்காக ‘மலாலா நிதி’ என்ற நிறுவனத்தை இவர் நடத்தி வருகி றார். ஆயிரக்கணக்கான தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நடத்தப்பட்டு வரும் இந்நிறுவனம் சார்பில், பல்வேறு ஆதரவற்றோர் காப்பகங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், பிஹாரில் செயல்படும் பல ஆதரவற்றோர் காப்பகங்களுக்கு மலாலா நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் நிதியுதவி வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அம்மாநிலத்தில் உள்ள மகி மற்றும் நாரி கன்ஜன் ஆகிய காப்பகங்களில் தங்கி யிருக்கும் சிறுமிகள், பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்படு வதாக அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக தற் போது சிபிஐ விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில், மேற்குறிப் பிட்ட இரண்டு காப்பகங்களுக்கும் மலாலா நிதியுதவி ரத்து செய் யப்படுவதாக அந்நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது.