

நாடு முழுவதும் 40 கோடி மக்களுக்கு மின் வசதி இல்லை, அவர்களுக்கு விரைந்து மின் இணைப்பை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் வியாழக்கிழமை தெரிவித்தார்.
கேள்வி நேரத்தில் அவர் கூறியதாவது: ராஜீவ் காந்தி கிராமின் வித்யூதிகரன் யோஜனா திட்டத்தில் மின் இணைப்பு வழங்க அனைத்து மாநிலங்களுக்கும் போதுமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பல மாநிலங் களில் இத்திட்டம் முழுமை பெறவில்லை. நாடு முழுவதும் 8 கோடி வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லை. இதன்படி சுமார் 40 கோடி மக்கள் மின்வசதி இன்றி உள்ளனர். அவர்களுக்கு விரைந்து மின்இணைப்பு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.