

ராணுவ வீரர்கள் அதிக திறனும் ஒழுக்கமும் கொண்டவர்கள் என்பதால், ஓய்வு பெற்ற வீரர்களுக்கு கார்பரேட் நிறுவனங்கள் வாய்ப்பளிக்க வேண்டும் என்று பாதுக்காப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி கூறி உள்ளார்.
அமிர்தசரஸில் மீள்குடியேற்ற இயக்குநரகம் சார்பாக நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தில் பேசிய பாதுக்கப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி, "ராணுவ வீரர்கள் தங்களது பணியிலிருந்து மிக குறுகிய காலத்திலேயே ஓய்வு பெறுகின்றனர். ஆனால் அவர்கள், அப்போதும் அயராது உழைக்கக் கூடிய எண்ணமும் ஆற்றலும் கொண்டவர்களாகவே உள்ளனர்.
கார்பரேட் நிறுவனங்கள் பல்வேறு சமூக பொறுப்புகள் அடங்கிய பணிகளை செய்து வருகின்றன. இது போன்ற பணிகளில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை பணியமர்த்துவதன் மூலம், பல வேலைகளை ஆற்றலுடன் முடிக்க முடியும்" என்றார்.
மேலும் அவர் கூறுகையில்: நாட்டில் உள்ள ராணுவ அதிகாரிகளின் குடியிறுப்புகள், மற்ற அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள குடியிறுப்புகளை காட்டிலும் நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறது. பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் அங்கு பாரட்டத்தக்கதாக உள்ளது என்றார்.