Published : 31 Aug 2018 08:58 am

Updated : 31 Aug 2018 08:58 am

 

Published : 31 Aug 2018 08:58 AM
Last Updated : 31 Aug 2018 08:58 AM

புனே போலீஸாரால் விடுவிக்கப்பட்ட இடதுசாரி ஆர்வலர்கள் வீட்டுக் காவலில் வைப்பு

மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி புனே போலீஸாரால் கைது செய்யப்பட்ட இடதுசாரி செயற்பாட்டாளர்கள் அனைவரும், உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு விடுவிடுக் கப்பட்டனர். இவர்கள் சொந்த ஊரில் நேற்று வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

மகாராஷ்டிர மாநிலம் பீமா - கோரேகானில் நடந்த கலவரம் தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் உள்ள பிரபல இடதுசாரி செயற்பாட்டாளர்களின் வீடுகளில் புனே போலீஸார் கடந்த செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர். இதில் ஹைதராபாத்தில் வரவர ராவ், மும்பையில் வெர்னான் கோன்சல்வ்ஸ், அருண் பெரைரா, பரிதாபாத்தில் சுதா பரத்வாஜ், டெல்லியில் கவுதம் நவலகா என 5 செயற்பாட்டாளர்களைக் கைது செய்தனர். இவர்களில் சுதா பரத்வாஜ், கவுதம் நவலகா ஆகியோரை வீட்டுக் காவலில் வைத்த போலீஸார் மற்ற மூவரையும் புனே அழைத்து வந்தனர்.

இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த உச்ச நீதிமன்றம் 5 பேரையும் சிறையில் அடைக்காமல் செட்பம்பர் 6-ம் தேதி வரை வீட்டுக் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.

இதையடுத்து புனே போலீஸார் தங்கள் பிடியிலிருந்த 3 செயற்பாட்டாளர்களை நேற்று முன்தினம் இரவு அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக வழக்கின் விசாரணை அதிகாரியான புனே காவல்துறை உதவி ஆணையர் சிவாஜி பவார் நேற்று கூறும்போது, “செயற்பாட்டாளர்கள் தங்களின் வீடுகளை அடைந்தனர். அவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் வீடுகளில் உள்ளூர் போலீஸாருடன் புனே போலீஸாரும் நிறுத்தப் பட்டுள்ளனர்” என்றார்.

இடதுசாரி கவிஞரும் எழுத்தாள ருமான வரவர ராவ் நேற்று காலையில் ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டை அடைந்தார். முன்னதாக ஹைதராபாத் விமான நிலையத்தில் அவர் கூறும்போது, “இது ஒரு பொய் வழக்கு. பாசிச கொள்கைகளுக்கு எதிராகப் போராடுவது சதி என்றால், இதை விட பெரிய சதி வேறு எதுவும் இல்லை. பீமா - கோரேகானில் நடந்த கலவரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகத் தான் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” என்றார்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author