Published : 25 Aug 2014 02:33 PM
Last Updated : 25 Aug 2014 02:33 PM

நீதிபதி நியமன மசோதாவுக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு

நீதிபதி நியமன மசோதாவுக்கு எதிரான பொதுநல மனுக்களை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய நீதித்துறை நியமன ஆணைய மசோதாவும், அது தொடர்பான அரசியல் சாசன சட்டத்திருத்த மசோதாவும் மக்களவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டன.

உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் நீதிபதிகளை நியமிக்கும் நடவடிக்கைகளை இப்போது நீதிபதிகளை கொண்ட 'கொலீஜியம்' என்ற குழு மேற் கொண்டு வருகிறது அதற்குப் பதிலாக, நீதிபதிகள் நியமனம், பணியிட மாற்றம் உள்ளிட்டவற்றை தேசிய நீதித்துறை நியமன ஆணையம் மேற்கொள்வதற்கு இந்த மசோதாக்கள் வகை செய்கின்றன.

இந்நிலையில், அரசியல் சட்டமசோதா 121-ஐ திருத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தொடரப்பட்டிருந்தன. இந்த மனுக்கள், உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.தேவ் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள்: மசோதா சட்டமாகும் முன்பே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்றும், சரியான நேரத்தில் மனுதாரர்கள் நீதிமன்றத்தை அணுகலாம் என்று கூறியும் மனுக்களை ரத்து செய்வதாக அறிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x