விவிபாட் இயந்திரங்கள் புகைப்படம் எடுக்குமா?- தலைமைத் தேர்தல் ஆணையர் மறுப்பு

விவிபாட் இயந்திரங்கள் புகைப்படம் எடுக்குமா?- தலைமைத் தேர்தல் ஆணையர் மறுப்பு
Updated on
1 min read

மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் யாருக்கு வாக்களித் தோம் என்பதை வாக்காளர்கள் அறிய ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரம் (விவிபாட்) பயன் படுத்தப்படுகிறது. இந்த இயந்திரங் கள் வாக்காளர்களை புகைப்படம் எடுக்கும் என்று வதந்தி பரப்பப் பட்டு வருகிறது.

இதுகுறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத், அளித்த பேட்டியில் கூறியிருப்ப தாவது:

வாக்காளர்களுக்குப் பணம் அளிக்கும் நபர்கள், அவர்களை மிரட்ட புதிய உத்தியை பயன் படுத்தி வருகின்றனர். அதாவது விவிபாட் இயந்திரங்கள் வாக்கா ளர்களைப் புகைப்படம் எடுக்கும். எனவே வாக்காளர்கள் யாருக்கு ஓட்டு போட்டார்கள் என்பதை புகைப்படம் மூலம் கண்டுபிடித்து விடுவோம் என்று அந்த நபர்கள் மிரட்டி வருகின்றனர்.

இது வெறும் வதந்தி. இதை வாக்காளர்கள் யாரும் நம்ப வேண்டாம். யாருக்கு வாக்களித் தோம் என்பதை உறுதி செய்ய ஒப்புகை சீட்டை மட்டுமே விவிபாட் இயந்திரம் வழங்கும். அந்த இயந் திரம் வாக்காளர்களைப் புகைப் படம் எடுக்காது. இதுதொடர்பாக வாக்காளர்களிடம் விழிப் புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள் ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in