Published : 07 Aug 2018 09:49 AM
Last Updated : 07 Aug 2018 09:49 AM

பாலியல் பலாத்கார புகார்: உ.பி. விடுதியில் 24 சிறுமிகள் மீட்பு - 18 பேரை காணவில்லை

உ.பி.யின் தியோரியா நகரில் ஆதரவற்றோர் காப்பகம் ஒன்றி லிருந்து, பாலியல் பலாத்கார புகாரை தொடர்ந்து 24 சிறுமிகள் நேற்று முன்தினம் மீட்கப்பட்டனர்.

காப்பக நிர்வாகிகள் 3 பேரை போலீஸார் கைது செய்தனர். 18 சிறுமிகளைக் காணவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக உபி. போலீஸ் அதிகாரிகள் நேற்று கூறியதாவது:

தியோரியா நகரின் ஸ்டேஷன் ரோட்டில் செயல்பட்டு வரும் ‘விந்தயவாசினி மகிளா பிரகிஷான் இவாம் சமாஜ் சேவா சன்ஸ்தான்’ என்ற காப்பகத்திலிருந்து பிஹாரைச் சேர்ந்த 10 வயது சிறுமி தப்பிவந்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.

காப்பகத்திலிருந்து ஒவ்வொரு நாளும் மாலையில் சிறுமிகள் கார்களில் அழைத்துச் செல்லப் பட்டு, மறுநாள் காலையில் கொண்டு வரப்படுவதாகவும் சிறுமி கள் அழுவதாகவும் கூறினார். பிஹாரின் பெட்டியா நகரைச் சேர்ந்த இச்சிறுமி வேலைப்பளு காரணமாக தப்பி வந்ததாக கூறினாள்.இதையடுத்து அந்த காப்பகத் தில் சோதனை நடத்தப்பட்டு, 24 சிறுமிகள் மீட்கப்பட்டனர். 18 சிறுமிகளைக் காணவில்லை.

காப்பகத்தை நடத்தி வந்த கிரிஜா திரிபாதி, அவரது கணவர் மோகன் திரிபாதி, கண்காணிப்பாளர் காஞ்சனலதா ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காப் பகத்திற்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

மீட்கப்பட்ட சிறுமிகளுக்கு மருத் துவப் பரிசோதனை செய்யப்படும். அவர்களின் வாக்குமூலம் நீதிபதி முன்னிலையில் பதிவு செய்யப் படும். இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

உ.பி. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரீட்டா பகுகுணா ஜோஷி கூறும்போது, “அந்த காப்பகத்தின் அங்கீகாரம் கடந்த ஆண்டு திரும்பப் பெறப்பட்டு, நிதியுதவி நிறுத்தப்பட்டது. அது இதுவரை எப்படி செயல்பட்டு வந்தது? இதற்கு யார் பொறுப்பு என்பது குறித்து விசாரிக்கப்படும்” என்றார்.

ஆனால் காப்பக நிர்வாகி கிரிஜா திரிபாதி கூறும்போது, “காப்பகம் மீதான குற்றச்சாட்டில் உண்மையில்லை. 3 ஆண்டுகளாக எங்களுக்கு நிதி வழங்கப்பட வில்லை. என்றாலும் காப்பகத்தை நடத்தி வருகிறோம்” என்றார்.

பிஹாரின் முசாபர்பூர் நகரில் அரசு உதவிபெறும் காப்பகம் ஒன்றில் சிறுமிகள் பாலியல் வன் கொடுமைக்கு ஆளான சம்பவம் அண்மையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மருத்துவப் பரி சோதனையில் இங்கு 34 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அண்டை மாநிலமான உ.பி.யிலும் இதே புகார் எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் உ.பி. காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது. பெண்களின் நலனில் பாஜக அரசு அக்கறை செலுத்துவதில்லை என சமாஜ்வாதி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x