Last Updated : 22 Aug, 2018 04:22 PM

 

Published : 22 Aug 2018 04:22 PM
Last Updated : 22 Aug 2018 04:22 PM

தேர்வு எழுதிய 8,000 பட்டதாரிகளும் ஃபெயில்: அரசு அக்கவுண்டண்ட் பணித்தேர்வில் அதிர்ச்சி

கோவாவில் அரசுப் பணிக்காக அக்கவுண்டண்ட் பிரிவில் 80 பொறுப்புகளுக்கான அரசுத் தேர்வு நடந்துள்ளது. இதில் குறைந்தபட்ச பாஸ்மார்க்கான 50-ஐ கூட எடுக்க முடியாமல் 8,000 பட்டதாரிகளும் பெயில் ஆனது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நூற்றுக்கு ஐம்பது எடுக்க வேண்டும் அவ்வளவே, ஆனால் தேர்வு எழுதிய 8,000 பட்டதாரிகலும் ஃபெயில் ஆனதாக பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

80 அக்கவுண்டண்ட்களுக்கான காலி இடங்களுக்கான அரசுத் தேர்வு ஜனவரி 7-ம் தேதி நடைபெற்றது. இது 100 மதிப்பெண்களுக்கான தேர்வு இதில் ஆங்கிலம், பொது அறிவு, கணக்கியல் சம்பந்தமான கேள்விகள் ஆகியவை அடங்கிய ஐந்தரை மணி நேர தேர்வாகும்.

இந்தத் தேர்வுக்குப் பிறகு வாய்மொழி நேர்காணலும் உண்டு. அதன் பிறகுதான் இறுதித் தேர்வு.

ஆம் ஆத்மி கட்சியின் கோவா மாநில பொதுச்செயலாளர் பிரதீப் பத்கோங்கர், முடிவுகளை அறிவிப்பதில் ஏன் இத்தனை தாமதம் என்று கூறியதோடு 8,000 பட்டதாரிகளும் ஃபெயில் ஆகியிருப்பது மாநில கல்வி ஒழுங்குமுறை வீழ்ச்சியின் ஒரு துயரகரமான வர்ணனையே என்று சாடியுள்ளார். கோவாவுக்கு பெரிய அவமானம். அதன் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளூக்கு பெரிய அவமானம், இங்கிருந்துதானே இத்தனைப் பட்டதாரிகளும் வந்துள்ளனர் என்று அவர் சாடியுள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x