காட்டுக்குள் மாவோயிஸ்ட்டுகளின் துப்பாக்கித் தொழிற்சாலை கண்டுபிடிப்பு

காட்டுக்குள் மாவோயிஸ்ட்டுகளின் துப்பாக்கித் தொழிற்சாலை கண்டுபிடிப்பு
Updated on
1 min read

ஜார்க்கண்ட் மாநில காட்டுக்குள் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் மறைமுகமாக நடத்திவந்த துப்பாக்கித்தொழிற்சாலையை பாதுகாப்புப் படையினர் நேற்று இரவு கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் அஷ்வினி குமார் சின்ஹா தெரிவித்ததாவது:

இந்திய மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் மாவோயிஸ்ட் பிரிவினர் நேற்று இரவு கொண்டகார் கிராமம் மற்றும் கோஹ்ராம் கிராமம் ஆகியவற்றுக்கிடையே  இருந்த காட்டுக்குள் ஒன்றாக கூடியிருப்பதாக கிடைத்த தகவலில் அடிப்படையில் போலீஸாரும் பாதுகாப்புப் படையினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

ஆனால் அங்கு தேடிச் சென்று பார்த்தபோது, எந்தத் தீவிரவாதிகளையும் பார்க்கமுடியவில்லை. அதேவேளை அடர்ந்த மரங்களுக்கிடையில் யாரும் அறியாத வகையில் அங்கு ஒரு சிறு தொழிற்சாலை இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைக்கண்டு மத்திய ரிசர்வ் போலீஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரும் சற்றே தடுமாறினர்.

அங்கிருந்து 30 நாட்டுத் துப்பாக்கிகள், 36 பிஸ்டல் பேரல்கள், 30 பிஸ்டல் ட்ரிக்கர்கள், பிஸ்டலில் பயன்படுத்தப்படும் 63 ஸ்பிரிங்குகள், துப்பாக்கியின் பின்பகுதியில் குண்டு பொருத்தப்படும் ஹேம்மர்கள், கேஸ் சிலிண்டர், வெல்டிங் உபகரணம் உள்ளிட்ட மற்ற தளவாடங்கள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

இவ்வாறு காவல் கண்காணிப்பாளர் சின்ஹா தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in