

நாட்டின் 68-வது சுதந்திர தின விழா தெலங்கானா மாநிலத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
தனித் தெலங்கானா மாநிலம் உருவான பின்னர் கொண்டாடப்படும் முதல் சுதந்திர தினம் என்பதால் அம்மாநிலத்தில் உற்சாகம் மிகுதியாக காணப்பட்டது.
கடந்த 50 ஆண்டுகளாக சுதந்திர தினத்தின் போது பரேட் திடலில் கொடியேற்றி கொண்டாட்டங்கள் நடைபெறும். ஆனால் இன்று, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோல்கொண்டா கோட்டையில் முதல்வர் சந்திர சேகர ராவ் தேசியக் கொடியை ஏற்றினார். முன்னதாக போலீஸ் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார்.
பின்னர் தெலங்கானா மக்கள் மத்தியில் சுதந்திர தின உரையாற்றினார்.