நீதித்துறை பெயரைக் கெடுக்க பிரச்சாரம்: தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா வேதனை

நீதித்துறை பெயரைக் கெடுக்க பிரச்சாரம்: தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா வேதனை
Updated on
1 min read

நீதித்துறையின் பெயரைக் கெடுக்க திட்டமிட்டு பிரச்சாரம் நடப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா வேதனை தெரிவித்துள்ளார்.

கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுநாத் பதவி உயர்வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, நீதிபதிகள் குரியன் ஜோசப், ரோஹின்டன் நரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அந்த மனுவில் இருந்த தகவல்களை படித்துப் பார்த்த தலைமை நீதிபதி லோதா கூறியதாவது:

இம்மனுவில் கர்நாடக நீதிபதி மஞ்சுநாத்தை பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க ‘கொலீஜியம்’ பரிந்துரை செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள் ளீர்கள். எந்த அடிப்படையில் இந்த தகவலை தெரிவித்துள்ளீர்கள். நான் தான் ‘கொலீஜியத் துக்கு’ தலைமை தாங்குகிறேன். இதுதவிர வேறு ஏதாவது ‘கொலீஜியம்’ உள்ளதா?

மஞ்சுநாத் பெயரை ‘கொலீஜியம்’ பரிந்துரைக்கவே இல்லை. பத்திரிகைகளில் வரும் செய்திகளை வைத்துக் கொண்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நடக்காத ஒன்றை, உண்மை இல்லாத ஒன்றை அடிப்படையாக வைத்து பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. நீதித் துறையின் பெயரைக் கெடுக்க வேண்டுமென்றே இத்தகைய பிரச்சாரம் மேற்கொள்ளப்படு கிறது.

நீதித் துறையின் இந்த செயல்பாட்டை குறை சொன்னால், மொத்த நீதித் துறைக்குமே ஆபத்தை விளைவிக்கும். நாட்டின் ஜனநாயகத் தையே பாதிக்கும். மொத்த நீதித் துறை யின் அஸ்திவாரத்தையே அசைத்து விடா தீர்கள். கடவுள் புண்ணியத்துக்காகவாவது இந்த நடைமுறையை குறை சொல்லாமல் இருங்கள்.

இவ்வாறு வேதனையுடன் தெரிவித்தார்.

மனுதாரர் ராம் சங்கர் சார்பில், வழக்கறிஞர் காமேஸ்வரன் ஆஜராகி, ‘கொலீஜியம்’ முறையில் வெளிப்படைத்தன்மை இல்லாததால்தான் இதுபோன்ற பிரச்சினைகள் வருகின்றன. நீதிபதிகள் நியமன முறையை உச்ச நீதிமன்ற இணையதளத்தில் வெளிப்படையாக வெளியிட்டால் இப்பிரச்னை இருக்காது’ என்று வாதிட்டார். அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in