Published : 31 Aug 2018 08:17 AM
Last Updated : 31 Aug 2018 08:17 AM

தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தால் ராஜினாமா செய்த ராமகிருஷ்ண ஹெக்டே

கர்நாடகாவில் காங்கிரஸ் அல்லாத ஆட்சியை முதன் முதலில் கொண்டு வந்தவர் ஜனதா கட்சியைச் சேர்ந்த ராமகிருஷ்ண ஹெக்டே. இவர் கடந்த 1988-ல் முதல்வராக இருந்த போது தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதாவது எதிர்க்கட்சி தலை வர்களான வீரேந்திர பாட்டீல், குண்டுராவ், வீரப்ப மொய்லி மற்றும் உட்கட்சி தலைவர்கள் தேவகவுடா உள்ளிட்ட 50 பேரின் தொலைபேசி அழைப்புகளை ராமகிருஷ்ண ஹெக்டே ஒட்டு கேட்கிறார் என காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

அப்போது ஜனதா கட்சியில் இருந்த தேவகவுடா போன்றோர் ராமகிருஷ்ண ஹெக்டேவுக்கு எதிராக முழு வீச்சில் செயல் பட்டனர். அப்போது ராமகிருஷ்ண ஹெக்டே, யாரும் எதிர்பாராத வேளையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். அப்போது அவர், “நான் யாருடைய தொலைபேசியையும் ஒட்டு கேட்கவில்லை. தொலைத் தொடர்பு துறையை நிர்வகிக்கும் மத்திய அரசு தான் தொலைபேசி அழைப்பை கண்காணிக்க முடி யும். இருப்பினும் தார்மீக அடிப் படையில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன். இதே போல் போபர்ஸ் ஊழல் குற்றச் சாட்டில் காங்கிரஸ் தலைமையி லான மத்திய அரசு ராஜினாமா செய்ய வேண்டும்” என்றார்.

ஆட்சி கவிழ்ந்த நிலை யில், அடுத்த தேர்தலில் ராம கிருஷ்ண ஹெக்டே தனிப் பெரும் பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். பிறகு கோஷ்டி பூசல் காரணமாக அடுத்த ஓராண் டில் ராமகிருஷ்ண ஹெக்டே பதவியை இழந்தார். அவரை தொடர்ந்து அதே கட்சியைச் சேர்ந்த எஸ்.ஆர்.பொம்மை கர்நாடக முதல் வராக பொறுப்பேற்றார்.

ஆனால் அவர் சரியாக ஆட்சி நடத்தவில்லை எனக்கூறி அரசியல் சட்டம் 356- பிரிவின் கீழ் அரசை மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு கலைத்தது. இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு, மத்திய அரசுக்கு எதிரான தீர்ப்பை பெற்றார். “மாநில அரசை கலைக் கும் குடியரசுத் தலைவரின் உத்தரவு முழுமையானது அல்ல. நாடாளு மன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்தால் மட்டுமே இந்த உத்தரவு முழுமை பெறும். பிரிவு 356- ஐ பயன்படுத்தும்போது முதலில் ஆட்சியை கலைத்துவிட்டு மாற்று வாய்ப்புகளைப் பார்க்க வேண்டும். சட்டப்பேரவையை கலைக்கக் கூடாது. இந்தப் பிரிவை பயன்படுத்துவது நீதிமன்ற பரிசீலனைக்கு உட்பட்டது” என்று உச்ச நீதிமன்றம் கூறியது. இந்த தீர்ப்பு இன்றுவரை இந்தியா முழு வதும் முன்மாதிரியாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x