Last Updated : 30 Aug, 2018 11:03 AM

 

Published : 30 Aug 2018 11:03 AM
Last Updated : 30 Aug 2018 11:03 AM

சமூக ஆர்வலர்கள் கைது; அறிவிக்கப்படாத எமர்ஜென்சி காலத்தில் இருக்கிறோம்: ஆனந்த் டெல்டம்ப்டே

அறிவிக்கப்படாத எமர்ஜென்சி காலகட்டத்தில் இருக்கிறோம் என்று பேராசிரியர் ஆனந்த் டெல்டம்ப்டே கூறியுள்ளார். சமூக ஆர்வலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டதையடுத்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பீமா கோரேகான் வழக்கு தொடர்பாக அதிரடி சோதனை மேற்கொண்ட புனே போலீஸார் சமூக செயற்பாட்டாளர்கள், தலித் சமூக ஆர்வலர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தி 5 பேரைக் கைது செய்தனர்.

இந்நிலையில் ஜனநாயக உரிமைகளுக்கான பாதுகாப்புக் குழுவின் பொதுச் செயலாளரான ஆனந்த் டெல்டம்ப்டேயின் கோவா வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதன் உறுப்பினர்களான அருண் ஃபெரைரா மற்றும் சோமா சென் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக கோவா மேலாண்மை நிறுவனத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் ஆனந்த் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ''அதிர்ஷ்டவசமாக நான் அலுவலக சுற்றுப் பயணமாக மும்பை வந்தேன். இல்லையெனில் உங்களின் முன்னால் நின்று என்னால் பேசியிருக்க முடியாது. அவர்கள் இந்நேரத்துக்கு என்னையும் கைது செய்து அழைத்துச் சென்றிருப்பார்கள்.

சிலரைக் குறிவைத்து கைது செய்தது இங்கே கேள்வியல்ல. இது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். தீவிரவாதியின் பணியை மாநிலம் கையில் எடுத்திருக்கிறது. மாநிலம் தன்னுடைய ஒழுக்க விழுமியங்களை இழந்தால், தனிமனிதர்கள் என்ன செய்ய முடியும்?

இந்தக் கைது நடவடிக்கை அறிவிக்கப்படாத அவசர நிலையாக இருக்கிறது, சொல்லப்போனால் 1975 அவசர நிலையைக் காட்டிலும் இது மோசமானது.

அப்போதைய அவசர நிலை அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு எடுக்கப்பட்டது. சட்டம் அதை அனுமதித்தது. அது எப்படித் தவறானது என்பதை நம்மால் விவாதிக்க முடியும். ஆனால் தற்போதைய நிலைக்கு எந்தவித சட்டப் பின்புலமும் இல்லை'' என்றார் ஆனந்த்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x