Last Updated : 06 Aug, 2018 02:14 PM

 

Published : 06 Aug 2018 02:14 PM
Last Updated : 06 Aug 2018 02:14 PM

இளைஞரின் தாடியை அகற்றியவர்கள் பற்றி ஒவைசி சர்ச்சைப் பேச்சு

சில நாட்களுக்கு முன் ஒரு முஸ்லிம் இளைஞரை கட்டாயப்படுத்தி சலூனுக்கு அழைத்துச் சென்று மூன்று பேர் தாடியை அகற்றிய சம்பவம் டெல்லியை அடுத்த குர்கானில் நடந்தது. இதற்கு பதிலளித்துள்ள முஸ்லிம் அமைப்புத் தலைவர் ஓவாய்சி நீங்களும் முஸ்லீமாக மாறுவீர்கள் என்று கூறியுள்ளார்.

ஜூலை 29 அன்று குர்கானில் மூன்று பேர் ஒன்று சேர்ந்து, யூனுஸ் எனும் முஸ்லிம் இளைஞரை தாக்கி அவமதித்துள்ளனர். யூனுஸை சலூனுக்கு அழைத்துச் சென்று அவரது தாடியை கட்டாயப்படுத்தி அகற்றினர். முஸ்லிம் இளைஞரை தாக்கிய அந்த இளைஞர்களை ஆகஸ்ட் 2 அனறு குர்கான் போலீஸ் கைது செய்தது.

இந்த சம்பவத்திற்கு 'அகில இந்திய மஜ்லிஸ்-இ-,இட்டஹதுல் முஸ்லிமன்' (ஏஐஎம்ஐஎம்) அமைப்பின் தலைவர் அஸாதுதீன் ஒவைசி தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படும் இளைஞர்களை குறிப்பிட்டு அச்சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு  தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

‘‘முஸ்லிம் ஒருவரின் தாடி மழிக்கப்பட்டது. அதைச் செய்தவர்களும் அவர்களது தந்தைமார்களுக்கும் நான் சொல்லிக்கொள்கிறேன். நீங்கள் எங்கள் தொண்டையை அறுத்தாலும் நாங்கள் முஸ்லிம்களாகத்தான் இருப்போம். நீங்களும் முஸ்லிம் மதத்திற்கு மாறுவீர்கள். நீங்களும் தாடி வைப்பீர்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x