

கேரளாவில் வரலாற்று காணாத வகையில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
இந்த நிலையில் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கிய கொச்சி விமான நிலையத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவு கொட்டித்தீர்த்து வரும் கனமழை, நிலச்சரிவில் சிக்கி ஒரே நாளில் 25 பேர் பலியாகியுள்ளனர். பல பகுதிகளில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கேரளாவின் முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான கொச்சின் விமான நிலையம் முல்லை பெரியாறு அணை திறக்கப்பட்டதாலும், கனமழையினாலும் நீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக கொச்சி வரும் விமானங்கள் திருவனந்தபுரம் போன்ற வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன. மேலும் சனிக்கிழமைவரை கொச்சின் விமான நிலையம் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வெள்ளம்போல் நீர் கொச்சின் விமான நிலையம் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.