Published : 09 Aug 2018 10:08 AM
Last Updated : 09 Aug 2018 10:08 AM

கருணாநிதிக்கு தனித்துவமான வரலாறு அமையும்: இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் புகழாரம்

திமுக தலைவர் கருணாநிதிக்கு தனித்துவமான வரலாறு அமையும் என இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் புகழாரம் சூட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி வருமாறு:

கலைஞர் கருணாநிதி மறைவுச் செய்தி கேட்டு தமிழ்க் கூறும் நல்லுலகம் சோகத்தில் ஆழ்ந் துள்ளது. அவர் முதுமையின் நியதிக்கு ஏற்பவே காலமாகி யுள்ளார். என்றாலும் அவர் தமிழ் மக்களின் கருத்தியலிலும் தமிழக அரசியலிலும் தமிழ்க் கலை இலக்கியத்திலும் ஆற்றிய பணிகளும் நிகழ்த்திய சாதனை களும் அவரை மறக்க முடியாத மன நிலைக்கு எம்மை ஆழ்த்தி யுள்ளது.

சுமார் 60 ஆண்டுகள் தொடர்ந்து மக்கள் பிரதிநிதியாக தேர்ந் த்தெடுக்கப்பட்டு, 5 முறை முதல்வராக பதவி வகித்துள்ளார். இது சாதாரண நிகழ்வல்ல. நவீன இந்திய அரசியல் வரலாற்றில் இவருக்கு தனித்துவமான ஒரு வரலாறு அமையும் என எதிர் பார்க்கலாம்.

கலைஞர் கருணாநிதி தனது ஆட்சிக் காலத்திலும் சமூக நீதியின் அடிப்படையில் சட்டங் களை உருவாக்கி கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் அடித்தட்டு மக்களுக்கு குறிப்பாக பெண் களுக்கு இட ஒதுக்கீடு செய்தார்.

1956-ல் சிதம்பரத்தில் நடை பெற்ற திமுக மாநாட்டில், இலங்கைத் தமிழர்கள் அனைத்து உரிமைகளும் பெற்று வாழ வேண்டும் என தீர்மானம் முன்மொழிந்தார். அன்றிலிருந்து இலங்கைத் தமிழர்களுக்காக அவர் எத்தனையோ போராட்டங்களை முன்னெடுத்துள்ளார்.

தன் வாழ்வைத் தமிழர் வரலாற்றின் அத்தியாயங்களாகப் பதிவு செய்து விட்டு மறைந்துள்ள கலைஞர் கருணாநிதிக்கு இலங்கைத் தமிழ் மக்களின் சார் பில் என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இரா.சம்பந்தன்

இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவரு மான இரா.சம்பந்தன் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு:

முதுபெரும் தமிழறிஞர், தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி காலமானார் என்ற செய்தியை அறிந்து, பேரிழப்பு ஏற்பட்ட துயரத்தை மனதில் உணர்ந்தேன்.

கடந்த 6 தசாப்தங்களாக பேரறிஞர் அண்ணா காட்டிய வழியில் அவர் அரசியல் பணியை ஆற்றியதோடு மட்டுமல்ல, செம்மொழியாகிய தமிழின் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் சிறப்பான பணிகளை செய்துள்ளார். பன்முக ஆளுமை கொண்டவராக அவர் திகழ்ந்தார். இந்திய துணைக் கண்டத்தின் அரசியலிலும் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவராகவும் அவர் மதிக்கப்பட்டார். அவருக்கும் எனக்கும் மிக நீண்ட காலமாக நெருங்கிய தொடர்பும் உறவும் இருந்துவந்தது.

நான் தமிழ்நாட்டில் வாழ்ந்த காலத்திலும் அதன் பின்பும் அவர் எனக்கு பல்வேறு வழிகளில் ஒத்துழைப்பும் ஆலோசனைகளும் வழங்கி வந்தார்.

செல்வநாயகம், அமிர்தலிங்கம் உள்ளிட்ட இலங்கைத் தமிழ்த் தலைவர்கள் தமிழ்நாட்டில் சீவித்த காலத்திலும் அதற்கு முன்பும் பின்பும் அவரின் அன்பும் எமக்கான ஒத்துழைப்பும் அதிகமாக இருந்தது. அரசியல் ரீதியிலும் எமக்கு பல்வேறு வகையில் உதவி வந்தார். அவரின் பிரிவு என் மனதில் ஆழ்ந்த கவலையைத் தருகிறது.

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளிலும் அவர் மிகுந்த ஈடுபாடு காட்டினார். கலவர காலங்களில் தமிழ் மக்கள் அடைந்த துயரங்கள், வேதனைகளில் தனது கரிசனத்தை காண்பித்து இந்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் செயல்பட்டார். அவரது பிரிவால் இலங்கைத் தமிழ் மக்களும் ஆழ்ந்த துயரம் அடைந்துள்ளனர். அம்மக்கள் சார்பிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பிலும் எனது ஆழ்ந்த கவலைகளையும் அனுதாபங்களையும் தெரிவிக் கிறேன்.

இவ்வாறு இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x