

கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி சீனாவின் வுஹான் நக ருக்கு சென்றிருந்தார். அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசினார். அப்போது டோக்லாம் பகுதியில் மோதல் மீண்டும் நிகழ்வதைத் தவிர்ப்பது என முடிவு செய்யப்பட்டது.
மேலும் எல்லையில் இரு தரப்பு ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்படுவதைத் தவிர்க்க ஹாட்லைன் வசதியை ஏற்படுத் தும் திட்டம் நீண்ட காலமாக உள்ளது. இதுகுறித்தும் இரு தலைவர்களும் பேச்சு நடத்தி னர். ஆனால் இந்த விவகாரத் தில் கருத்து வேறுபாடு நீடிக்கி றது.இந்நிலையில், சீன பாது காப்பு அமைச்சர் வெய் பெங்கே இந்தியாவுக்கு வர உள்ளார். அப்போது, ஹாட்லைன் குறித்து பேச்சுவார்த்தை நடை பெறும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.