மக்கள் மனது வைத்தால் முதல்வராக முடியும்: மங்களூரில் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி

மக்கள் மனது வைத்தால் முதல்வராக முடியும்: மங்களூரில் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி
Updated on
1 min read

மக்கள் மனது வைத்தால் முதல்வராக முடியும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

லிங்கா பட ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்க டேஷுடன் நடிகர் ரஜினிகாந்த் கடந்த புதன்கிழமை மங்களூர் பாஜ்பே சர்வதேச விமான நிலை யத்துக்கு வந்தார். விமான நிலைய நிர்வாகம் சார்பாக அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. அப்போது அவர் கன்னடத் தில் அளித்த பேட்டி வருமாறு:

‘‘ஷிமோகாவில் நடைபெறும் ‘லிங்கா' ஷூட்டிங்கிற்காக மங்களூர் வந்துள்ளேன். 22 வருடங்களுக் குப் பிறகு மங்களூர் விமான நிலையத்துக்கு வந்தது மகிழ்ச்சி யளிக்கிறது.

‘லிங்கா' ஷூட்டிங் ஏற்கெனவே மைசூர், மாண்டியா, மத்தூர், மேல் கோட்டை என பல இடங்களில் நடந்தது. இப்போது ஷிமோகாவில் ஜோக் அருவி அருகில் 21 நாட்கள் ஷூட்டிங் நடக்க இருக்கிற‌து. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ‘லிங்கா' படம் சூப்ப ராக வந்திருக்கிறது. என்னோட பிறந்தநாளான டிசம்பர் 12-ம் தேதி ‘லிங்கா' ரிலீஸ் ஆகிறது. கடவு ளோட ஆசீர்வாதத்தில் இப்போது உடம்பு நன்றாக இருக்கிறது'' என்றார். இதைத் தொடர்ந்து ரஜினி யிடம் அரசியல் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?

(வழக்கம்போல சிரித்து விட்டு) அது கடவுளோட விருப்பம். அவரோட செயல். கடவுள் விரும்பினால் எது வேண்டு மானாலும் நடக்கும்.

உங்களுடைய விருப்பம் என்ன?

கடவுளோட விருப்பம்தான் என் னோட விருப்பம் (மறுபடியும் சிரிக்கிறார்)!

அரசியலுக்கு வந்தால் முதல்வராக முடியும் என நினைக்கிறீர்களா?

மக்கள் மனது வைத்தால் முதல் வராக முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஷிமோகாவில் க்ளைமேக்ஸ்

மங்களூரில் இருந்து ஷிமோகா வுக்கு ரஜினி சென்றார். அங்குள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த அவர் வியாழக்கிழமை காலை தீர்த்தஹள்ளி  ராமேஷ்வரா கோயிலுக்கு சென்று சிறப்பு பூஜை செய்தார். அதன் பிறகு ‘கும்கி' உள்ளிட்ட பல‌ படங்கள் படமாக்கப்பட்ட ஜோக் அருவி அருகே ஷூட்டிங் நடக்கும் பகுதிக்கு வந்தார்.

அங்கு ‘லிங்கா' படத்துக்காக பெரிய‌ அணை போன்ற செட் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகே மிக பிரம்மாண்டமான‌ சிவன் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த செட்டில் ரஜினியும் கதாநாயகி சோனாக் ஷி சின்ஹாவும் நடித்த காட்சிகளை ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய கே.எஸ்.ரவிகுமார் காட்சி களை படமாக்கினார். ‘லிங்கா' படத்தின் ஷூட்டிங் 80 சதவீதம் முடிந்துவிட்டது.

இப்போது ஜோக் அருவியை சுற்றியுள்ள பகுதியில் நடைபெறும் ஷூட்டிங்கில் நடிகை அனுஷ்கா, நடிகர் பிரபு உள்ளிட்ட பலரும் கலந்து கொள் கின்றனர். இங்கு ரஜினி பங்கு பெறும் பாடல் காட்சியும் க்ளைமேக்ஸ் சண்டை காட்சியும் படமாக்கப்பட இருக்கிறது’ என படக்குழுவினர் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in